பிரபல நடிகர் உபேந்திரா மீது வழக்கு பதிவு.. சமூக வலைதள பதிவால் வந்த பிரச்சனை - அடுத்து நடந்தது என்ன?

By Ansgar R  |  First Published Aug 13, 2023, 11:57 PM IST

குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சாதிவெறி கருத்து தெரிவித்ததாக பிரபல கன்னட நடிகர் உபேந்திரா மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகராகவும் அரசியல்வாதியாகும் அவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


நேற்று சனிக்கிழமையன்று தனது அரசியல் அமைப்பான "பிரஜாகிய" வின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் நேரலையில் தோன்றி பேசியுள்ளார். அப்போது தான் அவர் ஜாதிய ரீதியாக கருத்துக்களை வெளியிட்டார் என்று கூறப்படுகிறது.

நடிகரின் அந்த கருத்துகள் குறித்து தங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை புகார்கள் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து உபேந்திரா சனிக்கிழமையன்று தனது சமூக ஊடக கணக்குகளில் இருந்த வீடியோவை நீக்கிவிட்டு தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். 

Latest Videos

undefined

தோள் பட்டையில் எட்டி உதைத்து! ஜெ. ஆடையை கிழித்து தாக்கியபோது வேடிக்கை பார்த்தவர் ஸ்டாலின்! சசிகலா பகீர்..!

"பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நேரலையில் வாய் தவறி அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது. இது மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது என்பதை அறிந்தவுடன் எனது சமூக ஊடக கணக்குகளில் இருந்த அந்த வீடியோவை நீக்கிவிட்டேன். மேலும் இந்த அறிக்கைக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். " என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் அவர்.

பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சட்டத்தின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெங்களூரு தெற்கு டிசிபி பி கிருஷ்ணகாந்த் தெரிவித்தார்.

"சென்னம்மனகெரே அச்சுகட்டு காவல் நிலைய எல்லையில் ஒரு வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்திய சட்டத்தின் 3(1)(ஆர்)(கள்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட உபேந்திரா வாக்குமூலம் அளித்துள்ளார் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது அறிக்கை வேண்டுமென்றே பதிவு செய்யப்பட்டது அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார், மேலும் அவர் விளக்கத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார், ஆனால் பல புகார்கள் வந்ததால், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

நீட் மசோதாவுக்கும், ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

click me!