தமிழில் மட்டுமே இருக்கனும்.. கேப்டனின் இறுதிச்சடங்கு எப்படி நடந்து? - குடும்பத்தினர் வைத்த கோரிக்கை என்ன?

Ansgar R |  
Published : Dec 30, 2023, 11:10 AM IST
தமிழில் மட்டுமே இருக்கனும்.. கேப்டனின் இறுதிச்சடங்கு எப்படி நடந்து? - குடும்பத்தினர் வைத்த கோரிக்கை என்ன?

சுருக்கம்

Captain Vijayakanth Final Rituals : பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நேற்று டிசம்பர் 29ம் தேதி 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சில வாரங்களுக்கு முன்பு மிகவும் மோசமானது. இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நலம் பெற்று வீடு திரும்பினார். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேமுதிகவின், கட்சி கூட்டத்தில் அவர் பங்கேற்றதும் அனைவரும் அறிந்ததே. 

ஆனால் அந்த கூட்டத்தில் பங்கேற்ற பொழுது அவர் நிலைதடுமாறி தன் இருக்கையில் இருந்து கீழே விழும் அளவிற்கு சென்றது பலருடைய நெஞ்சத்தில் வருத்தங்களை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், அதன் பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. 

உச்சத்தில் இருந்த ரஜினி மற்றும் கமல்.. ஒரே ஆண்டில் 18 படம் ரீலிஸ் செய்து மாஸ் காட்டிய கேப்டன் - 1984 மெமரீஸ்!

இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் டிசம்பர் 28ஆம் தேதி காலை 6.15 மணியளவில் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிமோனியா காரணமாக கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய உயிர் பிரிந்தது. பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அவருடைய மறைவுக்கு தங்கள் வருத்தங்களை தெரிவித்தனர். 

மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் விஜய் ஆண்டனி போன்ற முன்னணி நடிகர்களும் நேரில் வந்து விஜயகாந்தின் பூத உடலுக்கு தங்களதுடைய இறுதி மரியாதைகளை செலுத்தினர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், தளபதி விஜய் அவர்களும் விஜயகாந்தின் பூத உடலை பார்த்து கண்கலங்கி நின்றது அங்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் நேற்று டிசம்பர் 29ஆம் தேதி தீவுத்திடலில் இருந்து கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் பங்கேற்று தனது நண்பரும், அரசியல் தலைவருமான விஜயகாந்திருக்கு இறுதி மரியாதை செலுத்தினார். 

வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.. நெல்லை விரைகிறார் நடிகர் விஜய் - முழு விவம் இதோ!

இந்த சூழலில் தங்களுடைய இல்ல வழக்கப்படி விஜயகாந்த் அவர்களுக்கு நடக்க வேண்டிய இறுதி சடங்குகள் தற்போது நடந்து முடிந்துள்ளது. மேலும் விஜயகாந்த் அவருடைய இறுதிச் சடங்கில் சமஸ்கிருதத்திலோ அல்லது தெலுங்கிலோ சடங்குகள் மேற்கொள்ளக்கூடாது என்றும், தமிழில் மட்டும் தான் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் விஜயகாந்தின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி