Actor Vijay : நடிகர் விஜய் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தனது 68வது திரைப்பட பணிகளுக்காக ஹைதராபாத்தில் இருந்த நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய மரண செய்தியை கேட்டு அன்றைய தினமே, விஜயகாந்தின் பூத உடலுக்கு அவர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி திரும்பினார்.
இந்த சூழ்நிலையில் இன்று டிசம்பர் 30ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தங்கள் உடமைகளை இழந்த மக்களுக்கு, நலத்திட்ட உதவிகளை செய்ய உள்ளார் விஜய் என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இன்று சென்னையிலிருந்து நெல்லைக்கு புறப்படும் தளபதி விஜய் அவர்கள் நெல்லையில் உள்ள கேடிசி நகரில் காலை 11 மணியளவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
"எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே".. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட உருக்கமான பதிவு!
இந்த நலத்திட்ட உதவிகளின் போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் அவருடன் இருப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. தளபதி விஜய் அவகர்களின் அரசியல் வருகையும் வெகு தொலைவில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் நுழைவிற்காக தளபதி விஜய் அவர்கள் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றார். குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பட்டயங்கள் வழங்கி அவர் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.