
“கண்ணா லட்டு தின்ன ஆசையா“ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன்(37) . எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றிருந்தார். இவருக்கு கடந்த 2016 ம் ஆண்டு திருமணம் முடிந்து உமையாள் என்கிற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்திற்கு பிறகு “வாலிப ராஜா”, “சக்கபோடு போடு ராஜா” மற்றும் 50/50 ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவை மிரட்டும் கொரோனா.... முக்கிய முடிவில் இருந்து பின்வாங்கிய ட்ரம்ப்...!
கடந்த 26ம் தேதி இரவு மாரடைப்பால் டாக்டர் சேதுராமன் மரணமடைந்தார். இந்த செய்தி திரையுலகில் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. நடிகர் சேதுவின் மரணம் குறித்து இன்று வரையிலும் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது வருத்தத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அரைகுறை ஆடையில் ஆபாச நடனம்...வைரலாகும் “கோமாளி” நடிகையின் ரிலாக்சேஷன் வீடியோ...!
36 வயதில் இப்படி ஒரு மரணமா என அனைவரும் புலம்பி தீர்த்து வரும் சமயத்தில், அவருடன் வாலிப ராஜா படத்தில் நடித்த பாலிவுட் நடிகை நுஸ்ரத் பருச்சா தனது இரங்கலை பகிர்ந்து கொண்டுள்ளார்.சேதுவின் மரணம் குறித்த செய்தி எனக்கு தாமதமாக தான் கிடைத்தது. அதில் இருந்து அவருடைய குரலும், முகமும் எனது நினைவில் வந்து, வந்து செல்கிறது என்ற சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குட்டி ஆல்யாவின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்... குவியும் லைக்ஸ்...!
“வாலிப ராஜா” படத்தில் நடிக்கும் போது தமிழ் தெரியாத தனக்கு சேது உதவியதை நினைவு கூர்ந்துள்ள நுஸ்ரத் பருச்சா, தனது அம்மாவும் சேதுவின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், அவர் இறந்த செய்தியை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.