பிரபல பாடகி பரவை முனியம்மாவின் கடைசி ஆசை... நிறைவேற்றப்படுமா இறுதி கோரிக்கை?

By Kanimozhi Pannerselvam  |  First Published Mar 29, 2020, 11:26 AM IST

மறைந்த பிரபல பாடகி பரவை முனியம்மாவின் கடைசி ஆசை நிறைவேற்றப்படுமா?


மதுரை மாவட்டம் பரவை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புறப் பாடகி ஆன இவர் தூள் படத்தில் வரும் 'சிங்கம் போல' என்கிற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். அதன்பிறகு 25க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். 

Latest Videos

இதையும் படிங்க: அரைகுறை ஆடையில் ஆபாச நடனம்...வைரலாகும் “கோமாளி” நடிகையின் ரிலாக்சேஷன் வீடியோ...!

அதன் பின்னர் சிறுநீரக கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு திரைத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

உடல் நலம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடிய பரவை முனியம்மாவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் உதவிக்கரம் நீட்டினர். நடிகர்கள் அபி சரவணன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பண உதவி செய்தனர்.

இதனை கேள்விப்பட்ட அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள், பரவை முனியம்மா பெயரில் ரூ.6 லட்சத்தை நிரந்தர வைப்புதொகையாக வைத்து, அதன் மூலம் வரும் வட்டியை வைத்து அன்றாடம் செலவுகளை பார்த்துக்கொள்ள வழி செய்தார். 

இதையும் படிங்க: அமெரிக்காவை மிரட்டும் கொரோனா.... முக்கிய முடிவில் இருந்து பின்வாங்கிய ட்ரம்ப்...!

தான் இறந்துவிட்டால் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தனக்கு வழங்கி வந்த உதவித்தொகை, தனது மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு கிடைக்கும் படி நீண்ட காலமாக கோரிக்கைவிடுத்து வந்தார். தற்போது பரவை முனியம்மா மரணமடைந்துள்ள நிலையில், அவரது இறுதி கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுமா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 
 

click me!