பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார்..!

By manimegalai aFirst Published Jul 7, 2021, 8:38 AM IST
Highlights

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் கடந்த 30 ஆம் தேதி மூச்சுத்திறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து இவரை மருத்துவர்கள் கண்காணித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7 :30 மணியளவில் காலமாகி விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் கடந்த 30 ஆம் தேதி மூச்சுத்திறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து இவரை மருத்துவர்கள் கண்காணித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7 :30 மணியளவில் காலமாகி விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

98 வயதாகும் நடிகர் திலீப் குமார், ஜூன் 30 ஆம் தேதி மும்பையில் உள்ள   இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருவதாக,அவரது மனைவியம், மூத்த நடிகையுமான சாய்ரா பானு, தொடர்ந்து இவரது உடல் நிலை குறித்த தகவல்களை ரசிகர்களுக்கும், செய்தியாளர்களுக்கு தெரிவித்து வந்தார். 

கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர். கடந்த மே மாதம் மற்றும் ஜூன் மாதம் 6 ஆம் தேதி, ஜூன் 30 ஆம் தேதி என அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் இவரது உடல் நிலை தேதி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என, ரசிகர்கள் தொடர்ந்து பிராத்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை (புதன் கிழமை) காலை 7 : 30 மணியளவி இவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவுக்கு தொடர்ந்து பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

பழம்பெரும் நடிகர்களில்  ஒருவரான திலீப் குமார், 1944 ஆம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தவர். தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ள இவர், மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்ற நடிகர் என்கிற பெருமை இவருக்கு உண்டு. மேலும் அதிக பட்ச விருதுகளை வாங்கிய நடிகர் என, கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!