பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 3 நிமிடங்களில் 184 செல்பி புகைப்படங்களை எடுத்து சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்து உள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் தமிழிலும் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். அப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த அக்ஷய் குமார். அப்படத்துக்கு பின் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. நடிகர் அக்ஷய் குமாருக்கு கடந்த ஆண்டு ஒரு சோதனைக் காலமாகவே அமைந்தது. கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் கிட்டத்தட்ட 6 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. அந்த 6 படங்களுமே அட்டர் பிளாப் ஆகின.
இதனால் பிளாப் நடிகர் என்கிற விமர்சனத்துக்கும் உள்ளான அக்ஷய் குமார், இந்த ஆண்டு எப்படியாவது வெற்றி வாகைசூட வேண்டும் என்கிற முனைப்புடன் களமிறங்கி உள்ளார். அந்த வகையில் இந்த வருடம் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆக உள்ள முதல் திரைப்படம் செல்பி. இது மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன டிரைவிங் லைசன்ஸ் என்கிற திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
இதையும் படியுங்கள்... 'ராஜா ராணி 2' ரியாவை தொடர்ந்து... இந்த பிரபலமும் சீரியலில் இருந்து விலகிவிட்டாரா? என்ன தான் நடக்குது..!
செல்பி திரைப்படத்தை ராஜ் மேதா இயக்கி உள்ளார். இப்படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிகை டயானா பெண்டி நடித்திருக்கிறார். அதேபோல் பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மியும் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான சீதா ராமம் திரைப்படத்தில் நாயகியாக நடித்து அசத்திய மிருணாள் தாக்கூர் இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளார். செல்பி திரைப்படம் நாளை (பிப்ரவரி 24) ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்திற்காக வித்தியாசமான முறையில் புரமோஷன் செய்துள்ள நடிகர் அக்ஷய் குமார் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். அதன்படி அவர் 3 நிமிடங்களில் 184 செல்பி புகைப்படங்களை எடுத்து சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்து உள்ளார். இந்த செல்பிகள் அனைத்தையும் அவர் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்டார். இதற்கு முன் 3 நிமிடங்களில் 105 செல்பிகள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை கடந்த 2015-ம் ஆண்டு பிரபல டபிள்யூ டபிள்யூ இ சாம்பியனும், ஹாலிவுட் நடிகருமான ராக் படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை நடிகர் அக்ஷய் குமார் முறியடித்து உள்ளார். இந்த சாதனையை தன் ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக அக்ஷய் குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ஜெயம் ரவியின் 'அகிலன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!