
உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, நேற்று பிறப்பித்த உத்தரவில் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 - 2026 ஆம் ஆண்டுக்கான தலைவர், துணைத்தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் , இணைச்செயலாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவார்கள் என்று அறிவித்திருந்தது.
இதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவும் உள்ளது. இந்த நிலையில் தற்போதைய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் மன்னன் தற்போதைய உள்ள புதிய பைலா படி தேர்தல் நடத்த கூடாது என்றும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலோசனைப்படி நமது மூத்த முன்னோடிகளான மார்டன் தியேட்டர் சுந்தரம், எஸ். எஸ். வாசன், AVM. மெய்யப்ப செட்டியார், முக்தா ஸ்ரீனிவாசன், KRG, ராமநாராயணன் ஆகியோர் கொண்டுவந்த பைலா முறைப்படி தேர்தலை நடத்த கோரி இன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
Breaking: நடிகர் விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் விபத்து!
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தயாரிப்பாளர்கள் சில புதிய பைலாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சிலர் தயாரிப்பாளர் மன்னருக்கு ஆதரவாகவும் கருத்து கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.