Breaking: நடிகர் பிரபுக்கு நடந்த அறுவை சிகிச்சை! என்ன ஆச்சு மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

Published : Feb 22, 2023, 01:10 AM IST
Breaking: நடிகர் பிரபுக்கு நடந்த அறுவை சிகிச்சை! என்ன ஆச்சு மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

சுருக்கம்

நடிகர் பிரபு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு, அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன், என்கிற அடையாளத்துடன் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், ஒரு சில படங்களிலேயே அப்பாவின் பேர் சொல்லும் பிள்ளை என நடிப்பில் பெயர் எடுத்தவர் நடிகர் பிரபு. 1982 ஆம் ஆண்டு தன்னுடைய அப்பா சிவாஜி கணேசன் முக்கிய வேடத்தில் நடித்த 'சங்கிலி' படத்தில் ஹீரோவாக நடித்த பிரபு, முதல் படத்திலேயே அனைவரையும் தன்னுடைய நடிப்பால் அசர வைத்தார்.

இதை தொடர்ந்து அதிசய பிறவி, கோழி கூவுது, நீதிபதி, ராகங்கள் மாறுவது இல்லை, என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து, தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கினார். 80 மற்றும் 90களில் ஹாண்ட்சம் ஹீரோவாக வலம்வந்த இவர், சமீப காலமாக மிகவும் வலுவான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், நடிகர் பிரபு... திடீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெட்வே மருத்துவமனை,  பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் பிரபல திரைப்பட நடிகர் பிரபு, நேற்று இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு இன்று காலை யூத்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன.

தற்போது அவரது உடல்  நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பொதுவான மருத்துவ சோதனைகளுக்கு பிறகு இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்பினார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் விரைந்து அவர் குணமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிரபலங்கள் பலரும், போனில் தொடர்பு கொண்டு பிரபுவை விசாரித்து வருகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ
தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை