நடிகர் விஷால் நடித்து வரும், 'மார்க் ஆண்டனி' படத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் நடக்கவில்லை என படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில், ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் விஷால் நடிப்பில், கடைசியாக வெளியான 'லத்தி' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தை தொடர்ந்து 'மார்க் ஆண்டனி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில், விஷால் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படபிடிப்பு தளத்தில் திடீரென ஏற்பட்டுள்ள விபத்து படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. லாரி வரும் காட்சி எடுத்துக்கொண்டிருந்த போது, அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, தொழிலாளர்களை நோக்கி வந்தது.
பின்னர் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடியதால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல்... பெரும் விபத்து தடுக்கப்பட்டது. கூடுதல் எச்சரிக்கையுடன் படப்பிடிப்பு நடந்தாலும், அவ்வபோது இது போன்ற எதிர்பாராத சம்பவங்கள் படபிடுப்புகளில் நிகழ்வது வழக்கமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பல வருடம் கழித்து முதல் மகனை சந்தித்த பிக்பாஸ் தாமரை..! உச்சகட்ட மகிழ்ச்சியில் வெளியிட்ட புகைப்படம்!
விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்யும் படத்தை, மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத்குமார் என்பவர் தயாரிக்கிறார். இப்படத்தில் விஷால் தாடி, மீசை, என மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.