
நடிகர் சூர்யா தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்த கல்வி கொள்கை, நீட் தேர்வு, மற்றும் ஒளிப்பதிவு சீர்திருத்த முறைகளுக்கு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்த நிலையில், அவருக்கு எதிராக பாஜக இளைஞரணி தீர்மானம் இயற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
மேலும் செய்திகள்: முதுகு முழுவதையும் காட்டி... சைடு போஸில் கவர்ச்சியில் உச்சம் தொட்ட சமந்தா..! ஓவர் ஹாட் போட்டோஸ்!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டிருந்தார். இவருக்கு ஆதவாகவும், எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இவரது தொடர்ந்து புதிய ஒளிப்பதிவு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து , அவரது சகோதரர் கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஆகியோர் அடுத்தடுத்து தங்களது எதிர்ப்பையும் தெரிவித்திருந்தனர்.
இது மட்டும் இன்றி ஏற்கனவே நடிகர் சூர்யா மத்திய அரசு கொண்டு புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, என தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வருவதால் பாஜக இளைஞரணி இவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியள்ளது.
மேலும் செய்திகள்: பிரபல இயக்குனர் மாரடைப்பால் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகினர்..!
தமிழ்நாடு மாநில பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் கூறுகையில், "மாணவர்களை குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவலை பரப்புகிறார் நடிகர் சூர்யா. மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் நல திட்டங்களை உள்நோக்கத்துடன் எதிர்த்து வருகிறார். இத்துடன் இதை நிறுத்திக் கொள்ளவேண்டும் இல்லை என்றால் அவர் மீது உரிய நடவடிக்க எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.