இது மிகவும் கேவலமான செயல்... தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் காட்டமான பதிவு!

By manimegalai aFirst Published Jul 4, 2021, 1:12 PM IST
Highlights

இந்த விவகாரத்தின் உண்மை தன்மை தெரியாமல் இயக்குனரை களங்க படுத்தும் விதத்தில் வெளியான செய்திக்கு தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் மிகவும் காட்டமாக பதிவு போட்டு பதிலடி கொடுத்துள்ளார்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'கைதி'. இந்த படம் ஒரு உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்பதை ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில்... இந்த விவகாரத்தின் உண்மை தன்மை தெரியாமல் இயக்குனரை களங்க படுத்தும் விதத்தில் வெளியான செய்திக்கு தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் மிகவும் காட்டமாக பதிவு போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

தற்போது 'கைதி' படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யவும், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காரணம், கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர், 2007ஆம் ஆண்டு புழல் சிறையில் தனக்கு நேர்ந்த சம்பவங்களை தொகுத்து ஒரு கதையாக எழுதி அதை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடத்தில் சொல்லியிருக்கிறார். கதை பிடித்ததால் அதை படமாக்கலாம் என்று சொல்லி அவருக்கு ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார் எஸ்.ஆர்.பிரபு. பின்னர் அவரை தொடர்புகொள்ள வில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் கைதி படத்தைப் பார்த்த ராஜீவ் ரஞ்சன் தான் சொன்ன அதே கதையின் தாக்கம் 'கைதி' படத்தில் இருந்ததால்,  அதற்க்கு நஷ்ட ஈடாக தயாரிப்பாளர் எஸ்.ஆ.பிரபு ரூ. 4 கோடி தர வேண்டும் என்று கேரளா மாநிலம் கொல்லம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.ஆர்.பிரபுவிற்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, கைதி படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்யக் கூடாது, அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த வழக்கின் உண்மை தன்மை குறித்து முழு தகவலையும் இதுவரை எஸ்.ஆர்.பிரபு வெளியிடாத நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜை களங்கம் செய்வது போல் சில செய்திகள் வெளியானது. இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, "ஒரு வழக்கின் முழு விபரம் கூட அறியாமல் ஒரு இயக்குனரை களங்கப்படுத்தி செய்தி பதிவது கேவலமான செயல். அதை ஒரு செய்தி நிறுவனம் செய்வது அதனினும் மோசமானது. அட்மினுக்கு அறிவுறுத்துங்க ஐயா! என்று பதிவு செய்துள்ளார்.

click me!