
சோசியல் மீடியாவில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை மீனா சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலளித்துள்ளார்.
மேலும் செய்திகள்: வனிதா வெளியேற காரணம் ரம்யா கிருஷ்ணனா? நெட்டிசன்கள் கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதில்!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய 'பாபநாசம்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தற்போது படக்குழுவினர் இறங்கியுள்ளது. முதல் பாகத்தில், நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை கௌதமி நடித்திருந்தார். அப்போது இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். எனவே இவர்களது ஜோடிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
தற்போது கௌதமி நடிகர் கமல்ஹாசனை விட்டு பிரிந்து விட்டதால், இவர்கள் இணைந்து நடிக்க சாத்தியம் இல்லை என்றே கூறப்படுகிறது. எனவே 'பாபநாசம் 2 ' படத்தில் திரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த மீனாவே நடிப்பார் என கூறப்பட்டது. இது குறித்து ரசிகர்க ஒருவர் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு, கமல்ஹாசனிடம் கேளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பின் கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: கண்கூசும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சி... ஸ்கின் கலர் டிரஸில் மிரட்டும் யாஷிகா ஆனந்த்...!
மற்றொரு ரசிகர் தன்னுடைய திருமண ஆசையை வெளிப்படுத்தும் விதமாக, "தன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, நடிகை மீனா நீங்கள் கொஞ்சம் லேட்... என யாரும் எதிர்பாராத வண்ணமாக மிகவும் கூலாக பதிலளித்து, தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.