வடிவேலு பட இயக்குனரின் காமெடி படத்தில் நடிக்கும் நயன்தாரா!

By manimegalai aFirst Published Jul 4, 2021, 12:13 PM IST
Highlights

நடிகை நயன்தாரா தற்போது காமெடி பக்கம் தன்னுடைய திறமையை காட்ட முன்வந்துள்ளார். அதன் படி இவர் வடிவேலுவை வைத்து இரண்டு காமெடி படங்களை இயக்கிய, இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 

நடிகை நயன்தாரா தற்போது காமெடி பக்கம் தன்னுடைய திறமையை காட்ட முன்வந்துள்ளார். அதன் படி இவர் வடிவேலுவை வைத்து இரண்டு காமெடி படங்களை இயக்கிய, இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: நடிகை மீனாவிடம் திருமண ஆசையை வெளிப்படுத்திய ரசிகர்! இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டாரு?
 

நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் லைம் லைட்டில் இருக்கும் பிரபலம். எனவே இவருடன் ஜோடி போட பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டாலும், கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளையும், வித்தியாசமான கதைகளையும் தான் அதிகம் தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது 'நெற்றிக்கண்' மற்றும் 'அண்ணாத்த' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள இவர், காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இதை தவிர்த்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகார பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும் நயன்தாரா நடிக்க உள்ள காமெடி படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது .

மேலும் செய்திகள்: கண்கூசும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சி... ஸ்கின் கலர் டிரஸில் மிரட்டும் யாஷிகா ஆனந்த்...!
 

நடிகர் வடிவேலுவை வைத்து, 'தெனாலி ராமன்', 'எலி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் யுவராஜ் தயாளன், நயன்தாராவை வைத்து முழு நேர காமெடி படத்தை இயக்க அவரிடம் ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதை நயன்தாராவிற்கு பிடித்து போனதால், முழு நேர காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!