பிரபல மலையாள இயக்குனர் 'அந்தோணி ஈஸ்ட்மேன்' ஏற்கனவே உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு மலையாள திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இயக்குனர் 'அந்தோணி ஈஸ்ட்மேன்' தமிழ் திரையுலகில் 90 களின் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்த, சில்க் சுமிதாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்தியவர் என்கிற பெருமையை கொண்டவர். ஒரு ஸ்டில் போட்டோ கிரப்பராக திரையுலகில் தன்னுடைய பயணத்தை துவங்கி, படிப்படியாக இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் மாறியவர்.
undefined
'இணையதேடி' என்ற மலையாள படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தன்னுடைய முதல் படத்திலே நடிகை சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்தினார். பின்னர் அம்படா ஞானே, வயல், ஐஸ் கிரீம் உட்பட சில படங்களை இயக்கினார். சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.
75 வயதாகும் இவர் சமீப காலமாகவே உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு மலையாள திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.