
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது புதிய புதுப்பொலிவுடன் ஓடிடி-க்காக நடத்தப்படுகிறது. தமிழில் முதன்முறையாக இவ்வாறு நடத்தப்படுவதால், இதனை பிரபலப்படுத்தும் விதமாக இதற்கு முன் நடந்து முடிந்த சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்கள் 14 பேரை தேர்ந்தெடுத்து களமிறக்கி உள்ளனர்.
அதன்படி முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் இருந்து ஷாரிக்கும், தாடி பாலாஜியும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதாவும், நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியும், 5-வது சீசனில் இருந்து நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதில் முதல் வார இறுதியில் சுரேஷ் சக்ரவர்த்தியும் (Suresh chakravathy), இரண்டாவது வார இறுதியில் சுஜா வருணியும் (suja varunee), மூன்றாவது வார இறுதியில் ஷாரிக் மற்றும் அபிநய் ஆகியோர் எலிமினேட் ஆகினர். இதுதவிர கடந்த வாரம் வனிதா தானாகவே வெளியேறினார். அவருக்கு பதில் வைல்டு கார்டு எண்ட்ரியாக சதீஷ் உள்ளே சென்றார்.
பிக்பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் ஏரியா என சிகரெட் பிடிப்பதற்கென தனி அறை ஒன்று இருக்கும். அங்கு நடப்பவற்றை இதுவரை நடந்த 5 சீசன்களில் காட்டியதில்லை. ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அங்கு நடப்பவையும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அண்மையில் நடிகை அபிராமி, சக ஆண் போட்டியாளர்களுடன் இணைந்து தம் அடிக்கும் வீடியோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில், அந்த ஸ்மோக்கிங் ஏரியாவில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் நடத்தப்படும். அதன்படி இந்த வாரம் பஞ்சாயத்து டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொருவருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலாவும், அபிராமியும் கணவன் மனைவியாக நடித்து வருகின்றனர்.
இந்த டாஸ்க் இடைவெளியின் போது ஸ்மோக்கிங் ரூமுக்குள் சென்ற பாலாவும், அபிராமியும் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் என்ன நடக்கிறது என பார்க்க சென்ற நிரூப், ஷாக் ஆகி திரும்பி வருவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. பாலாவும், அபிராமியும் நெருக்கமாக இருந்ததை பார்த்து தான் நிரூப் ஷாக் ஆனதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து அபிராமி அங்கிருந்து வர, பாலாவும் பின்னாடியே வருகிறார்.
ஸ்மோக்கிங் ரூமுக்கு சென்று வந்த பின்னர் நிரூப் செம்ம அப்செட்டில் இருந்தார். ஸ்மோக்கிங் ரூமில் பாலாவும், அபிராமியும் நெருக்கமாக நடந்துள்ளார்கள். அதனால் தான் அதை காண்பிக்கவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தை சிம்பு தட்டிக் கேட்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். நடிகை அபிராமி, நிரூப்பின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Actor Prabhas : என்னதான் பிரச்சனை... 42 வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணல? - முதன்முறையாக மனம் திறந்த பிரபாஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.