வாவ்...தமிழ் திருநாளில் வெளியாகும் 'கே.ஜி.எஃப் 2'.. ட்ரைலர் எப்ப தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Mar 03, 2022, 02:26 PM ISTUpdated : Mar 03, 2022, 02:27 PM IST
வாவ்...தமிழ் திருநாளில் வெளியாகும்  'கே.ஜி.எஃப் 2'.. ட்ரைலர் எப்ப தெரியுமா?

சுருக்கம்

'கே.ஜி.எஃப். 2'  ஏப்ரல் 14ஆம் தேதி திரையில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது...  

யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’  டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் சாதனைகளையும் செய்தது. தற்போது கே.ஜி.எஃப் சாப்டர் 2 என்ற பெயரில் 2வது பாகத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் இரண்டாம் பாகத்தில் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 

நாயகன் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎஃப்2 திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு ஜனவரி  7ஆம் தேதி வெளியாகி இருந்தது.100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இந்திய அளவில் சாதனை படைத்த அந்த டீசரில் படக்குழுவினருக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது. 

டீசரில் இறுதியில் யஷ் ஒரு போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிற்கும் போலீஸ் வாகனத்தை பெரிய துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்துவார். முழுமையாகக் குண்டுகள் காலியானவுடன், அந்தத் துப்பாக்கியின் சூட்டில் சிகரெட்டைப் பற்றவைப்பார். இந்த காட்சி தற்போது பிரச்சனையை உருவாக்கியுள்ளது. 

இதற்கு கர்நாடக மாநிலத்தின் புகையிலை ஒழிப்புப் பிரிவும், சுகாதாரத் துறையும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இந்தக் காட்சியில் சிகரெட் புகைப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை. இது சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விளம்பரத்துக்குத் தடை விதிக்கும் சட்டத்தின் 5ஆவது பிரிவை மீறிய செயல் என்பதால் அந்த டீசரை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

முன்னதாக நாயகன் யாஷின் பிறந்த நாள் அன்று   KGF 2 திரைக்கு வரும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை திருநாள் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் முடிந்துள்ளது. இந்த நிலையில் 'கே.ஜி.எஃப். 2'  படத்தின் டிரைலர் வரும் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?