bharathi kannamma serial : பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷ்னிக்கு பதில் நடித்து வரும் வினுஷா குறித்து யாரும் அறியாத விஷயம் ஒன்றை, இத்தொடரின் நாயகன் அருண் பிரசாத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு, ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம், இதில் ஹீரோயினாக நடித்து வந்த டார்க் ஸ்கின் அழகி, ரோஷ்னி தான். அப்பாவியாக நடித்த போதும் சரி, குழந்தைக்கு அம்மாவாக தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்த போதும் சரி, மிகவும் நேர்த்தியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.
ரோஷ்னி, வினுஷா
பட வாய்ப்புகள் குவிந்து வந்ததால் இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷ்னி திடீர் என சீரியலை விட்டு விலகினார். இதனால் பாரதி கண்ணம்மா சீரியலின் டிஆர்பி-யும் மளமளவென சரியத் துவங்கியது.
மேலும் புது கண்ணம்மாவாக வினுஷா என்பவர் நடித்து வருகிறார். இவரும் பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் ரோஷ்னி மாதிரியை இருந்தாலும், திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும், இன்னும் சீரியல் பழைய டி.ஆர்.பி ரேட்டிங்கை பிடிக்க போராடி வருகிறது.
இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷ்னிக்கு பதில் நடித்து வரும் வினுஷா குறித்து, இத்தொடரின் நாயகன் அருண் பிரசாத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன்படி நடிகை வினுஷா, பகலில் சீரியல் ஷூட்டிங்கில் கலந்துகொள்வதாகவும், இரவில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்.... Nayanthara New car :புது காருடன் பாடிகாட் முனீஸ்வரன் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா