
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில், குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.
அதன்படி இதுவரை நதியா சங், அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் அபிஷேக் மட்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைவான வாக்குகளை பெற்றதன் காரணமாக அபிஷேக் மீண்டும் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளார். வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த பின் முதல் எவிக்ஷனிலேயே அபிஷேக் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.