Aparna Das: இதை விட வேற என்ன வேணும் தளபதி ரசிகர்களுக்கு.. 'பீஸ்ட்' அப்டேட் வெளியிட்டு மாஸ் காட்டிய அபர்ணா தாஸ்

Published : Dec 05, 2021, 03:02 PM IST
Aparna Das: இதை விட வேற என்ன வேணும் தளபதி ரசிகர்களுக்கு.. 'பீஸ்ட்' அப்டேட் வெளியிட்டு மாஸ் காட்டிய அபர்ணா தாஸ்

சுருக்கம்

தளபதி விஜயின் (Vijay) 'பீஸ்ட்'  படத்தில்  (Beast Movie) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை அபர்ணா தாஸ் (Aparna Das), தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 'பீஸ்ட்' படத்தின் அப்டேட்  ஒன்றை ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார்.  இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.  

தளபதி விஜயின் 'பீஸ்ட்'  படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை அபர்ணா தாஸ், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 'பீஸ்ட்' படத்தின் அப்டேட்  ஒன்றை ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார்.  இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய் படத்தின் எந்த ஒரு அப்டேட் வந்தாலும், அதனை வேற லெவலுக்கு அவரது ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள். அந்த வகையில், நேற்று நடிகர் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி 29 ஆண்டுகள் நிறைவடைவதை ஹேஷ்டேக் வெளியிட்டு,  இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர்  என்பது அனைவரும் அறிந்ததே...

இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் மற்றொரு சூப்பர் அப்டேட் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய் தற்போது நடித்து வரும் படத்தின் நூறாவது நாள் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அதன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தாறுமாறாக கொண்டாடினர். விரைவில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பீஸ்ட்' படத்தில் முதல் முறையாக தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை 'பீஸ்ட்' படம் குறித்து பெரிதாக வாய் திறக்காத அபர்ணா தாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனவே, இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடல்  கிறிஸ்துமஸ் தினத்திலோ, அல்லது நியூ இயர் தினத்திலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தென்னிந்தியாவின் 'ராஜமாதா'; 40 ஆண்டுகால உழைப்பு; 200 கோடி சொத்து: ரம்யா கிருஷ்ணனின் அசுர வளர்ச்சி!
லாக்கப்பில் கார்த்திக்: துடி துடித்துப் போன ரேவதி: அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!