
அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘கிரீடம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். இதையடுத்து ஆர்யாவுடன் மதராசபட்டினம், விக்ரமுடன் தாண்டவம், தெய்வத்திருமகள், விஜய்யுடன் தலைவா என அடுத்தடுத்து பிரபல நடிகர்களுடன் பணியாற்றியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘தலைவி’. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. கங்கனா, அரவிந்த் சாமி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் ஏ.எல்.விஜய். இவர் இயக்க உள்ள புதிய படத்தில் நடிகை அனுஷ்கா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. ஏற்கனவே இயக்குனர் விஜய்யுடன் தாண்டவம், தெய்வத் திருமகள் போன்ற படங்களில் பணியாற்றியுள்ள அனுஷ்கா, தற்போது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் மூலம் நடிகை அனுஷ்காவும், நடிகர் விஜய் சேதுபதியும் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.