பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் யார்.. யார்... என்கிற மிகப்பெரிய விவாதமே சமூக வலைத்தளத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது இதில் கலந்து கொள்ள உள்ளவர்கள் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் மற்றும் மிகவும் பிரபலமாக அறியப்படுவார்கள் என்பதாலேயே மாடலிங் துறையை சேர்ந்தவர்கள், விஜே, செய்தி வாசிப்பாளர்கள், குணச்சித்திர நடிகர்கள் போன்ற பலர் இதில் கலந்து கொண்டு விளையாடுவதை வழக்குமாக வைத்துள்ளார். 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கி விளையாடுவது என்பது மிகப்பெரிய டாஸ்காக இருந்தாலும், இந்த 100 நாட்கள் மக்களின் ஆதரவோடு யார் வெற்றி பெறுகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை, இதில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்குமே பட வாய்ப்புகள் கிடைத்து விடுவது இல்லை. இதற்க்கு மிகப்பெரிய உதாரணம் என்றால்... பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் மக்களின் முழு ஆதரவையும் பெற்ற ஓவியா தற்போது வரை ஒரு வெற்றி படம் கூட கொடுக்காமல் பட வாய்ப்புகள் இல்லாமல் தான் உள்ளார். அதே போல், பிக்பாஸ் வெற்றியாளர்களான ஆரவ், ரித்விகா, ஆரி, முகேன் ராவ், போன்ற யாருக்குமே இதுவரை பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் அமையவில்லை.
அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறாவிட்டாலும், கலந்து கொண்டவர்கள் சிலர் பல படங்களின் வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார்கள். உதாரணமாக ஹரீஷ் கல்யாண், பிக்பாஸ் ரைசா, தர்ஷன், போன்றவர்கள். எனவே வெற்றி தோல்வியை கடந்து... திறமையும் இருந்தால் மட்டுமே வெளியில் வந்தும் அவர்களால் திரைத்துறையில் நீடிக்க முடியும்.
மேலும் செய்திகள்: நடிகை நயன்தாரா வெளியிட்ட திடீர் அறிக்கை..!
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ஆரம்பமாக உள்ள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் தனலட்சுமி, மற்றும் நிவாஷினி என்கிற இருவர் ஆடிஷனில் வெற்றி பெற்று பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நம் எதிர்பார்த்த பல பிரபலங்கள் இந்த லிஸ்டில் இல்லாதது வருமே... தற்போது வெளியாகியுள்ள முழு போட்டியாளர்கள் குறித்த லிஸ்ட் இதோ...
ஜிபி முத்து (டிக் டாக் பிரபலம்)
அஸீம் (சீரியல் நடிகர்)
அசல் கோலார் (மியூசிக் ஆர்ட்டிஸ்ட்)
ஷிவின் கணேசன். (ட்ரான்ஸிஸ்ட்)
ராபர்ட் மாஸ்டர். (நடன இயக்குனர்)
ஷெரின் (மாடல்)
ராம் ராமசாமி (கிரிக்கெட்டர் /மாடல் )
ஏடிகே (பாடகர் - இலங்கை)
ஜனனி (செய்தி வாசிப்பாளர் இலங்கை)
மேலும் செய்திகள்: யுவன் சங்கர் ராஜாவின் இசை கச்சேரியால் ஏற்பட்ட விபரீதம்..! 5 பேர் காயம்..? என்ன நடந்தது முழு விவரம் இதோ...
அமுதவானன் (விஜய் டிவி காமெடியன்)
VJ மகேஷ்வரி (நடிகை / தொகுப்பாளினி)
VJ கதிரவன்
ஆயிஷா (சத்யா சீரியல் நடிகை)
தனலட்சுமி (பொதுமக்கள் ஆடிஷனில் தேர்வானவர்)
ரச்சிதா மஹாலட்சுமி (சரவணன் மீனாட்சி நடிகை)
மணிகண்டன் ராஜேஷ் (நடிகர் / ஐஷ்வர்யா ராஜேஷ் அண்ணன்)
சாந்தி அரவிந்த் (சீரியல் நடிகை)
விக்ரமன் (விஜே)
குயீன்சி
நிவாஷினி (ஆடிஷனில் தேர்வானவர்)
மேலும் செய்திகள்: நயன்தாராவின் திடீர் முடிவு... மருத்துவர்கள் கூறியது இது தான்..? குண்டை தூக்கி போட்ட பயின்வான் ரங்கநாதன்!