நடிகை நயன்தாரா வெளியிட்ட திடீர் அறிக்கை..!

By manimegalai a  |  First Published Oct 8, 2022, 10:47 PM IST

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான 'காட் ஃ பாதர்' திரைப்படம் திரையரங்குகளில் வசூலை வாரி குவித்து வரும் நிலையில், நடிகை நயன்தாரா இந்த படத்தின் வெற்றிக்காக திடீர் என அறிக்கை வெளியிட்டு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.
 


இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'God Father'. அக்டோபர்  மாதம் 5 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, திரையரங்குகளில் வசூல் வேட்டை ஆடிவருகிறது. இந்நிதியில் இந்த படத்தின் வெற்றிக்கு, திடீர் என அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை நயன்தாரா.

இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, 'காட் ஃபாதர்' திரைப்படத்தை பிளாக்பஸ்டர் படமாக்கிய அனைத்து திரைப்பட ஆர்வலர்களுக்கும் என் ரசிகர்களுக்கும் நன்றி. இந்த படத்தை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுவதை பார்க்கும் போது மிகவும் மனநிறைவாக உள்ளது. 'காட் ஃபாதர்' எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம், காரணம் இந்த படத்தில் இருப்பவர்கள் அனைவருமே மிகவும் அற்புதமானவர்கள்.

Latest Videos

மேலும் செய்திகள்: வீடு ரெடி.. வீரர்களும் ரெடி.. வேட்டைக்கு நீங்க ரெடியா..? வெளியானது பிக்பாஸ் புரோமோ..
 

மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் மீண்டும் ஒரு முறை இந்த படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். அவர் வைரம் போன்ற ஒரு மனிதர். எப்போதும் உச்சாகத்துடன் இருப்பவர். மேலும் அவருடன் செட்டில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் மிகவும் அருமையான நினைவுகளை கொண்டது. அதே போல் அனைவராலும் விரும்பப்படும் நடிகர் என்றால் அது சல்மான் கான். நீங்கள் நடித்ததால் இந்த படம் இன்னும் வலுப்பெற்றது அதற்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் சத்யதேவ் மற்றும் என் சகோதரி வேடத்தில் நடித்த தான்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுமே மிகவும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார்கள். இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா போன்ற அனைவருமே தன்னுடைய திறமையால் இந்த படத்தை வெற்றிபெற செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்: யுவன் சங்கர் ராஜா போட்ட அந்த பதிவு..! ரசிகர்கள் செய்த செயலால்... சுவர் இடிந்து விழுந்து 6 பேர் காயம்!
 

ஆர்.பி.சௌத்ரி சார் மற்றும் பிரசாத் சார் இந்த பிரமாண்ட படத்தை அருமையாக கேன்வாஸ் செய்து கொண்டு சென்றனர்.  சூப்பர் குட்  பிலிம்ஸின் ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றியும் வாழ்த்துக்களும். இப்படி ஒரு பிளாக் பஸ்டர் ஹிட்டை தங்களுக்கு கொடுத்த ரசிகர்களுக்கு இறுதியாக நன்றி தெரிவித்து தன்னுடைய அறிக்கையை முடித்துளளார்.

click me!