சிறந்த முன்னணி நடிகருக்கான 'ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்' பெற்ற ஜோக்கர் பட நடிகர் குருசோமசுந்தரம்!

Published : Oct 08, 2022, 08:35 PM IST
சிறந்த முன்னணி நடிகருக்கான 'ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்' பெற்ற ஜோக்கர் பட நடிகர் குருசோமசுந்தரம்!

சுருக்கம்

ஆசிய திரைப்படங்களுக்கான 'ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்' பிரபல நடிகர் குருசோமசுந்தரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

2022 ஆண்டின் ஆசிய நாடுகளின் திரைப்படங்களுக்கான 'ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்' விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் குருசோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பலர் தங்களின் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

கூத்து பட்டறையில் பயிற்சி பெற்று, பின்னர் 2011 ஆம் ஆண்டு வெளியான 'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் குரு சோமசுந்தரம். இந்த படத்தை தொடர்ந்து, கடல், பாண்டிய நாடு, ஜிகிர்தண்டா, தூங்காவனம், கோஹினூர் போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால் இவரது நடிப்பு திறமையை ரசிகர்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய திரைப்படம் என்றால் அது 'ஜோக்கர்' படம் தான்.

மேலும் செய்திகள்: யுவன் சங்கர் ராஜா போட்ட அந்த பதிவு..! ரசிகர்கள் செய்த செயலால்... சுவர் இடிந்து விழுந்து 6 பேர் காயம்!
 

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், குரு சோமசுந்தரத்திற்கு ஜோடியாக நடிகை ரம்யா பாண்டியன் நடித்திருந்தார். மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றும் கூறலாம். தமிழ் மொழியை தொடர்ந்து மலையாள திரையுலகிலும் இவர் படு பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

மேலும் செய்திகள்: யுவன் சங்கர் ராஜாவின் இசை கச்சேரியால் ஏற்பட்ட விபரீதம்..! 5 பேர் காயம்..? என்ன நடந்தது முழு விவரம் இதோ...

மின்னல் முரளி படத்தில் நடித்ததற்காக, சிறந்த வில்லன் நடிகருக்கான சைமா விருது உற்பட பல விருதுகளை பெற்றார். இந்நிலையில் ஆசிய நாடுகளின் திரைப்படங்களுக்கான விருது' ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்' வழங்கப்பட்டது. இதில் பதினாறு நாடுகளைச்சேர்ந்த பல்வேறு மொழிப்படங்கள் கலந்துகொண்டன. சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது நடிகர் குருசோமசுந்தரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் மீண்டும் இணைகிறார்களா? என்ன தான் நடக்கிறது... கஸ்தூரி ராஜா கூறிய தகவல்..!

இந்த விருது 'மின்னல்முரளி'  படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டது. டிசம்பர் மாதம்  விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது. ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகளை சார்ந்த பல்வேறு மொழி திரைத்துரையை சார்ந்தவர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி; ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?
ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!