BiggBoss Vanitha : இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... சமந்தா பாணியில் ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போட்ட வனிதா

Published : Jan 17, 2022, 11:00 AM IST
BiggBoss Vanitha : இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... சமந்தா பாணியில் ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போட்ட வனிதா

சுருக்கம்

சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத நடிகையாக வலம் வரும் வனிதா, தற்போது சமந்தா பாணியில் ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட பீட்டர் பால் விவகாரம் மூலம் வனிதா விஜயகுமார் சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறினார். அந்த பப்ளிசிட்டி இன்று வரை தொடர்ந்து வருகிறது. பீட்டர் பாலை பிரிந்த கையோடு சினிமாவிலும், சின்னத்திரையிலும் பிசியாக நேரம் செலவிட்டு வருகிறார் வனிதா. 

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் வனிதா, பிபிஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டையிட்டு விலகியது மீண்டும் சர்ச்சையை உருவாக்கியது. 

தற்போது வனிதா விஜயகுமார் வரிசையாக பல படங்களில் கமிட்டாகியுள்ளதால், ஷூட்டிங்கில் செம்ம பிசியாக உள்ளார். சோசியல் மீடியாவில் தான் நடித்து வரும் படங்கள் குறித்த அப்டேட்டுகளோடு, அவ்வப்போது எதையாவது கொளுத்திப்போட்டும் வருகிறார். 

சமீபத்தில் கூட மாலையும், கழுத்துமாக பவர் ஸ்டாருடன் வனிதா வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அது வனிதாவும், பவர் ஸ்டாரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான புரோமோஷன் என்பதும் பின்னர் ரசிகர்களுக்கு தெரியவந்தது.

இவ்வாறு சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத நடிகையாக வலம் வரும் வனிதா, தற்போது சமந்தா பாணியில் ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அதன்படி தவசிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்து’ என்கிற படத்திற்காக கானா பாலா பாடிய பாடலுக்கு வனிதா குத்தாட்டம் போட்டுள்ளாராம். வனிதா நடனமாடியபடி இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் காத்து படக்குழு வெளியிட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் முதல் நாள் வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே.. எவ்வளவு தெரியுமா?
டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!