BiggBoss5 பிரியங்காவின் முத்தம் ; புரியாமல் தவிக்கும் தாமரை; புகைவதை பற்ற வைக்கும் அக்சரா!!

Kanmani P   | Asianet News
Published : Dec 02, 2021, 09:19 AM IST
BiggBoss5 பிரியங்காவின் முத்தம் ; புரியாமல் தவிக்கும் தாமரை; புகைவதை பற்ற வைக்கும் அக்சரா!!

சுருக்கம்

Bigg Boss Tamil5 பிரியங்காவை ஏன் கட்டிப்பிடிக்கிறீர்கள் என தாமரையிடம் கேட்டு மேலும் கடுப்பேத்துகிறார் அக்சரா. 

கடந்த வாரம் முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் பிரியங்கா-தாமரை தான். பிரியங்கா எப்போதும் சூடான வார்த்தைகளால் மற்றவர்களை கலாய்ப்பவர். இது சில நேரம் சிரிப்பில் முடிந்தாலும் பல நேரம் சண்டைக்கு வித்திட்டு விடுகிறது.  

இவ்வாறு தான் பிக் பாஸ் ஹவுசில் இருக்கும் அக்சரா, தாமரைச்செல்வி உள்ளிட்டவர்களுடன் பிரியங்கா மோதலை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

முந்தைய எபிசோடுகளில் தாமரை வீட்டிலிருந்தாலும், நாட்டிலிருந்தாலும் பிரச்சனை என கூறியதாக குறிப்பிட்டு பிரியங்காவை நாமினேட் செய்த தாமரை, எப்போதும் தன்னுடைய குரல் தான் ஓங்கி இருக்க வேண்டும் என நினைப்பவர் பிரியங்கா நான் இதை ஏங்கவேனாலும் சொல்லுவேன் என அனைவர் முன்னிலையிலும் கூறியிருந்தார். இதனால் பிக் பாஸ் எபிசோட் செம பரபரப்பானது.

பின்னர் சமையல் டீமில் இருந்த தாமரை பிரியாணி செய்ய அதை சாப்பிட்ட பிரியங்கா, டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த தாமரைக்கு முத்தம் இட்டு பிரியாணி சூப்பர் என கூறுகிறார். இந்த காட்சி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அதோடு நீ நல்லவளா? கெட்டவளா? என்னும் கேள்வியை தாமரைக்குள் எழுப்பியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய எபிசோட் முடிவில் பெட்ரூமில் படுத்திருக்கும் தாமரை அருகில் வரும் அக்ஷரா, நீ ஏன் பிரியங்காவை கட்டி பிடிக்கிற, உன்ன அவ எவ்ளோ அசிங்க படுத்தியிருக்கா என பிட்டு போட ஆரம்பிக்க, கடுப்பான தாமரை பாக்கி என அக்ஷராவை திட்டுகிறார். நானா அவள கட்டி பிடிக்கிறேன் மனம் நோகும் படி பேசிவிட்டு பிரியங்காவே தான் வந்து கட்டி பிடிக்கிறார். அவ ஏன் இப்படி நடந்துக்கிறானு புரிஞ்சுக்கவே முடியலைன்னு கூறுகிறார். விடாமல் மேலும் மேலும் பிரியங்கா குறித்து பேசி சூடேத்துகிறார் அக்சரா.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Iswarya Menon : அவள் உலக அழகியே!! லெகங்காவில் நடிகை ஐஸ்வர்யா மேனனின் கண்கவர் கிளிக்ஸ்!
Reba Monica John : சுடிதாரில் சொர்க்கமே தெரியுதே! கண்கவர் அழகில் ரெபா மோனிகா ஜான்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!