
இதுவரை நடந்து முடிந்த அனைத்து சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி கட்டாயம் இருந்தனர். எப்படியாவது இருவரையாவது பிக் பாஸ் டீம் ஜோடியாக்கி விடும் பின்னர் வெளியே வந்த பிறகு பிரேக்கப் செய்து கொள்வார்கள். ஆரவ்-ஓவியா, கவின்- லாஸ்லியா என காதல் ஜோடிகளின் கதைகள் நாம் அறிந்தே. ஆனால் இந்த முறை இப்படி ஒரு சுவாரஸ்யம் அமையவே இல்லை என்றே சொல்லலாம். இருந்தும் காதல்ப கிசுகிசுவை உருவாக்க பிக்பாஸ் டீமும் பல வித டாஸ்கை போட்டியளர்களுக்கு கொடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்த வாரம் கொடுக்கப்படுள்ள பிரேக்கிங் நியூஸ் டாஸ்கில், ஜோடியாக சுற்றும் ஒவ்வொருவரையும் மற்ற போட்டியாளர்கள் நொண்டி பார்க்கிறார்கள். ஏற்கனவே தனது கணவர் இழப்பு குறித்து கண்ணீர் மல்க கூறியிருந்த பாவனி மீது ஆண் போட்டியாளர்களுக்கு கரிசனம் அதிகரித்திருந்தது. அப்போது ஜெமினி கணேசன் பேரனான அபிநய் சற்று வித்யாசமான பாசத்தை பாவனிக்கு கொடுக்க சுதாரித்து கொண்ட பாவனி பெண் போட்டியாளர்களிடம் சொல்லி புலம்புகிறார். பின்னர் ராஜு நேரடியாக நீ பாவனியை லவ் பண்ணுறியா என அபிநயிடம் கேட்க வெளியில் இருந்த ரசிகர்கள் கொந்தளித்து போனார்கள். அதோடு அபிநயின் நட்பை இதுவரை ஏற்றுக்கொள்ளாதது போலவே பாவனியும் பேசி வருகிறார். நேற்று கூட தான் தனியாக இருப்பதாக பாவனி தெரிவித்தார்.
இந்நிலையில் பாவனி - அமீர் இடையேயான உறவை தெரிந்து கொள்ள போட்டியாளர்கள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். முக்கியமாக அபிநய். 50 வது நாள் புதிய போட்டியாளராக வந்த அமீர் பாவனியுடன் நெருங்க பல முயற்சிகள் எடுத்து வருகிறார். ஆனாலும் எப்போதும் போல பாவனி தனியாக இருப்பதாகவே கருதி வருகிறார்.
இவ்வாறு இருக்க நேற்று அபிநய் மற்ற போட்டியாளர்களை புரிந்து கொள்ளும் டாஸ்கின் படி அமீரிடம் கேள்வி கேட்கிறார். அதில் பெரும்பாலான கேள்விகள் பவானி - அமீர் இடையேயான உறவை தெரிந்து கொள்ளும் விதமாகவே இருந்தது. பாவனி உங்களை சகோதரனாக நினைப்பதாக கூறுகிறார் நீங்கள் எப்படி நினைக்கிறிங்கனு அபிநய கேட்க நயிஸாக பதில் சொல்லாமல் நழுவுகிறார் அமீர். மீண்டும் அதே கேள்வியை அபிநய் கேட்க அவ ஒரு பயித்திகார பிரண்ட் என சொல்லி முடிக்கிறார் அமீர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.