Kangana Ranaut : சக்தி வாய்ந்த பெண் நான்.... இன்ஸ்டா பதிவு மூலம் பரபரப்பை ஏற்படுத்திய கங்கனா

Ganesh A   | Asianet News
Published : Dec 01, 2021, 08:43 PM IST
Kangana Ranaut : சக்தி வாய்ந்த பெண் நான்.... இன்ஸ்டா பதிவு மூலம் பரபரப்பை ஏற்படுத்திய கங்கனா

சுருக்கம்

உச்சநீதிமன்றத்தில் கங்கனா மீது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தான் நாட்டின் சக்தி வாய்ந்த பெண் என்று அவர் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் சமூக வலைதள பதிவுகளை தணிக்கை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சரன்ஜித் சிங் சந்திரபால் என்பவர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், சீக்கியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை கங்கனா பதிவிட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரிமையை சமூக வலைதளங்களில் தவறாக கங்கனா பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டிய அவர், கங்கனா ரனாவத்தின் சமூக வலைதள பதிவுகளை தணிக்கை செய்ய வேண்டும் என்றும், அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை மும்பைக்கு மாற்றி விசாரிக்க கோரியும் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் ஆறு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 2 ஆண்டுகளுக்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.

இவ்வாறு, உச்சநீதிமன்றத்தில் கங்கனா மீது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தான் நாட்டின் சக்தி வாய்ந்த பெண் என்று அவர் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் இதனை பதிவிட்டுள்ளார். டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால் கங்கனாவின் டுவிட்டர் கணக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிரந்தரமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025 பாக்ஸ் ஆபிஸில் ஓப்பனிங் கிங் யார்? முதல் நாள் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ
பாலய்யாவின் மாஸ் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டாக இருந்ததா? அகண்டா 2 விமர்சனம் இதோ