
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தீனா படத்தில் இருந்து நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் தல என பாசமாக அடைமொழி வைத்து அழைத்து வந்தனர். அதனால் தல என்கிற வார்த்தை பல படங்களில் வசனமாகவும், பாடலாகவும் இடம்பெறும் அளவுக்கு பிரபலமானது.
இந்நிலையில், தன்னை அஜித், அஜித்குமார் அல்லது சுருக்கமாக ஏ.கே என அழைத்தால் போதுமானது எனவும் இனி தன்னை தல அல்லது வேறு எந்த அடைமொழியுடனும் அழைக்க வேண்டாம் எனவும் அஜித் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், அஜித்தின் இந்த திடீர் அறிவிப்புக்கு பின்னணியில் கிரிக்கெட் வீரர் தோனி இருப்பதாக பகீர் தகவல் ஒன்று பரவி வருகிறது. நடிகர் அஜித்தை கடந்த 2001-ம் ஆண்டு முதல் ரசிகர்கள் தல என அழைத்து வருகின்றனர். அதேபோல் கிரிக்கெட் வீரர் தோனிக்கு கடந்த 2008-ம் ஆண்டு சி.எஸ்.கே அணி தல என்ற பட்டத்தை கொடுத்தது.
தோனிக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளதால், அவரை தல என்று அழைத்தால் அஜித்தின் புகழ்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் அஜித் ரசிகர்கள், தோனியை தல என்று அழைப்பவர்களை சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டி வந்தார்களாம். இந்த விஷயம் சில தினங்களுக்கு முன்னர் கூட டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. இதையடுத்து தான் அஜித் இத்தகைய திடீர் அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.