BiggBoss5"மக்கள் எனக்கு பிச்சை போட்ருக்காங்க" எமோஷன் ஆனா அபிஷேக், ஏற்றிவிட்ட பிரியங்கா!!

Kanmani P   | Asianet News
Published : Dec 02, 2021, 07:17 AM IST
BiggBoss5"மக்கள் எனக்கு பிச்சை போட்ருக்காங்க" எமோஷன் ஆனா அபிஷேக், ஏற்றிவிட்ட பிரியங்கா!!

சுருக்கம்

Bigg Boss Tamil 5 பிரியங்கா-அபிஷேக் நட்பு பற்றிய கேள்வியை தொடர்ந்து கவுஸ்மேட்ஸ் எழுப்பி வருவதால்  செம கடுப்பாகிறார் அபிஷேக்.

பிக் பாஸ் சீசன் 5 செம விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் பிரேக்கிங் நியூஸ் டாஸ்க் தொடர்ந்தது. அப்போது ராஜு- இமான் அண்ணாச்சி இருவரும் தொகுத்து வழங்கினர். அதில் தாமரை எழுப்பிய கேள்வியையாய் இவர்களும் மீண்டும் எழுப்பினர். அதாவது அபிஷேக்-பிரியங்கா நட்பு குறித்து கேட்டனர். அதோடு லைட் ஆஃப் செய்த பிறகு இருவரும் விளையாடுவதாக கூறி கலாய்த்தனர். 

பின்னர் பிரியங்கா டீம் டாஸ் செய்ய ஆரம்பித்த போது இருவருக்கும் இடையேயான நட்பு என்னவென்று அபிஷேக்-பிரியங்கா இருவரும் தங்களது நடிப்பின் மூலம் விளக்கம் அளிக்க அதையும் ஹவுஸ் மேட்  விமர்சிக்கிறார்கள்.

பின்னர் இருவரும் தனியாக அமர்ந்து மற்ற போட்டியாளர்கள் தங்களை பற்றி நினைக்கும் கருத்து குறித்து விவாதிக்கின்றனர். அப்போது தாமரை உள்ளிட்ட போட்டியாளர்கள் தங்களை பார்க்கும் பார்வையையும் அவர்கள் கூறிய விமரிசனங்களையும் பிரியங்கா எடுத்து கூற செம கடுப்பான அபிஷேக் மக்கள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் தனக்கு பிச்சை போட்டுள்ளதாக கூறி எமோஷன் ஆகிறார்.

பிக் பாஸ் சீசன் 5-ல் முதல் ஆளாக மிக குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறியவர் அபிஷேக் தான் பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் இவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். அபிஷேக் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து, எந்த பிரச்சினையிலும் தலையிடாமல் அமைதியாக இருந்து வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக பிரியங்கா மற்றும் நிரூப் இருவரையும் மற்ற போட்டியாளர்கள் கார்னர் செய்வதை பார்த்துவிட்டு தற்போது பொங்கி எழுந்து விட்டார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Netflix Pandigai : 2026-ல் ஒரு டஜன் தமிழ் படங்களை வாங்கிக் குவித்த நெட்பிளிக்ஸ்... என்னென்ன படங்கள் தெரியுமா?
கிரேட் எஸ்கேப்... ராஜா சாப் படத்தின் பர்ஸ்ட் சாய்ஸ் ‘இந்த’ தமிழ் நடிகரா? - நல்ல வேளை அவர் நடிக்கல..!