BB5"நட்பை நம்பி ஏமாற நான் தயராக இல்லை" முகத்தில் அறைந்தார் போல பதில் கூறிய நிரூப்; முகம் வாடிப்போன அபிநய்!!

Kanmani P   | Asianet News
Published : Dec 02, 2021, 08:41 AM IST
BB5"நட்பை நம்பி ஏமாற நான் தயராக இல்லை"  முகத்தில் அறைந்தார் போல பதில் கூறிய நிரூப்; முகம் வாடிப்போன அபிநய்!!

சுருக்கம்

BiggBoss Tamil 5 பிரியங்கா, ராஜூவை மட்டுமே இந்த வீட்டில் நான் அதிகமாக நம்புகிறேன் என  கூறிய நிரூப், நட்பு என்ற பெயரில் ஏமாற தயாராக இல்லை என கூறுகிறார். 

நிரூப் -அண்ணாச்சி இடையேயான சூடான விவாதத்தால் பிக் பாஸ் வீடே கலவரமயமானது. இந்த ரணகளத்தை குறைக்கும் விதமாக நேற்று நடைபெற்ற டாஸ்க் இருந்தது என்றே சொல்லலாம். பிரேக்கிங் நியூஸ் டாஸ்கின் போது நிகழ்ச்சியையே கலப்பாக மாறிவிட்டனர் ராஜு- இமான் அண்ணாச்சி டீம். 

டாஸ்கை ஆம்பிக்கும் போதே  சுயம்வரத்தை எதிர்பார்த்து வந்த நிரூப் சுயபுத்தியை இழந்தார் என்ற தலைப்பில் செய்தி வாசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து உங்களுக்கான ஜோடி இங்கு கிடைக்கவில்லையா என ராஜு கேட்க நான் எதிர்பார்க்கும் அழகில் யாரும் இங்கில்லை என்கிறார் நிரூப். 

முன்னதாக நீங்கள் யாரிடமும் ஏன் நட்பாக பழக முயல்வதில்லை என கேட்ட கேள்விக்கு பதிலளித்த நிரூப்;  நான் வாழ்க்கையில், அடுத்தவர்களை நம்பி நிறைய விஷங்களில் அடிபட்டு இருக்கேன். மறுபடியும் , அடுத்தவர்களை நம்பி ஏமாறக்கூடாதுனு நினைக்கிறேன். மற்றவர்கள் என் மீது காட்டும் பாசம் உண்மையா பொய்யா என்பது இந்த வீட்டில் இருக்கும் வரைக்கும் தெரியாது.

நான் அவர்களை நம்பிவிட்டு, அது எல்லாம் பொய் என்று எனக்கு தெரிந்தால், அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த காரணத்திற்காகத்தான் அனைவர் இடத்திலும் தள்ளி இருக்கிறேன் என்று கூறினார். அதோடு வாழ்க்கையில் நட்பு என்பது மிகவும் முக்கியமானது அந்த நட்பை நான் நிச்சயமாக மதிப்பேன் என்றார். இந்த வீட்டில் பிரியங்கா, ராஜூவை மட்டுமே நான் அதிகமாக நம்புகிறேன் என்கிற பிட்டையும் போட்டு தள்ளினார்.

நிரூபின் நட்பை பெற அபிநய் பல நாட்களாக நெருங்க முயற்சித்து வருகையில் நிரூப் இவ்வாறு கூறியதால் சாக் ஆன அபிநய் மிகுந்த சோகமாக காணப்பட்டார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷால் முத்து - மீனா இடையே வெடிக்கும் பிரச்சனை; கல்யாணியால் கதிகலங்கி நிற்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை
Rajinikanth Net Worth : எளிமையின் சிகரம் ரஜினிகாந்த்... யம்மாடியோ இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?