KoogleKuttapa song :கே எஸ் ரவிகுமாருடன் கைகோர்த்த பிக்பாஸ் தர்ஷன்,லாஸ்லியா..ஜீவியின் குரலில் வெளியானது அலை அலை

Kanmani P   | Asianet News
Published : Jan 21, 2022, 07:04 PM ISTUpdated : Jan 21, 2022, 07:05 PM IST
KoogleKuttapa song :கே எஸ் ரவிகுமாருடன் கைகோர்த்த பிக்பாஸ் தர்ஷன்,லாஸ்லியா..ஜீவியின் குரலில் வெளியானது அலை அலை

சுருக்கம்

KoogleKuttapa song : கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பிக் பாஸ் தர்ஷன், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள கூகுள் குட்டப்பா படத்திலிருந்து ஜீ வி குரலில் அலை அலை பாடல் வெளியாகியுள்ளது...

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கைப்பற்றியுள்ளார். 

தன்னிடம் நீண்ட காலமாக உதவியாளர்களாக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் இயக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 

இந்த படத்தில் பிக்பாஸ் தர்ஷனும், அவருக்கு ஜோடியாக அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியாவும் நடிக்கின்றனர். லாஸ்லியா ஏற்கனவே பிக்பாஸ் பிரபலமான ஆரியுடன் ஒரு படமும், ஹர்பஜன் சிங் உடன் பிரெண்ட்ஸ் படத்திலும், மற்றொரு புது ஹீரோவின் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலிடம் நல்ல பிள்ளையாக பெயர் வாங்கிய தர்ஷனை வைத்து தன்னுடைய ராஜ்கமல்  ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் படம் தயாரிப்பதாக நம்மவர் உறுதியளித்திருந்தார். இதையடுத்து ‘தாய்க்குப்பின் தாரம்’ என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்த தர்ஷனுக்கு தற்போது கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் ‘கூகுள் குட்டப்பன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 
 
இந்த படத்தில் வயதான அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமாரும், அவருடைய வெளிநாடு வாழ் மகனாக தர்ஷனுக்கு, அவருடைய ஜோடியாக லாஸ்லியாவும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு துவக்கத்தில் பூஜையுடன் ஆரம்பமானது. அந்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில்  கூகுள் குட்டப்பா படத்திலிருந்து ஜிவி குரலில் அலை அலை பாடல் வெளியாகியுள்ளது...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!