Bigg Boss 5 :பாவனி-அபிநய் குறும்படம்..பிக் பாஸுக்கு பாய் சொன்ன அண்ணாச்சி..நெகிழ்ச்சியில் முடிந்த எலிமினேஷன்

By Kanmani P  |  First Published Dec 13, 2021, 7:08 AM IST

Bigg Boss tamil 5 : 70 நாட்களில் ஒரு முறை கூட கண்ணீர் சிந்தாத ராஜு முதல் முறையாக அண்ணாச்சி வெளியேறும் போது கண்ணீர் விட்டு கதறி விட்டார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நமீதா மாரிமுத்து, நாடியா சங், சின்ன பாப்பா, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபிஷேக் உள்ளிட்டோர் இது வரை எலிமினேட் ஆகி உள்ளனர். இதில் முதல்வாரத்தில் வெளியேற்றப்பட்டு மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே வந்த  அபிஷேக் தான் கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் வெளியேற்றப்பட்டார்.

பின்னர் கடந்த வாரம் அரசியல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதோடு பாவனி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் ஆண் போட்டியாளர்கள் சற்று கொந்தளிப்புடனே காணப்பட்டார்கள். டாஸ்கின் போது இமான் அண்ணாச்சி தாமரையிடம் நடந்து கொண்டன விதத்தை கவனித்து கொண்டிருந்த பிரியங்கா,   பாவனி - அபிநய் இருவரும் நாங்கள் பேசினால் மட்டும் கத்துகிறாய் அண்ணாச்சியை ஒன்றும் சொல்லவில்லை என கூறி பிரச்னையை பூதாகரமாக மாற்றினார். பின்னர் வர இறுதி நாள் நெருங்கும் நேரத்தில் பிரியங்கா தாமரையிடம் சமாதானம் பேசிவிட்டார்.

Latest Videos

இதற்கிடையே  பாவனி - அபிநய் இடையேயான உறவு குறித்து ராஜ், சிபி உள்ளிட்ட ஹவுஸ் மேட் அடிக்கடி கேள்வி எழுப்பி வந்தனர். இந்த பிரச்னையை வார இறுதியில் போட்டியாளர்களை சந்தித்த கமலிடமும் வைக்கப்பட்டது. அப்போது  பாவனி -அபிநய் இருவரும் தங்களுக்குள் எதுவும் இல்லை என வாதிட உடனே ஆயுதத்தை எடுத்த கமல் குறும்படம் மூலம் குட்டை உடைத்தார்.

பின்னர் கடந்த வாரத்திற்கான எலிமினேஷனை அறிவிக்க தயாரான கமல்; முன்னதாக தாமரை, அக்‌ஷரா அபினய் உள்ளிட்டோர் காப்பாற்றுவதாக அடுத்தடுத்து அறிவித்த கமல்ஹாசன் கடைசியாக இமான் வெளியேற்றப்படும் தகவலை நேரடியாகவே அறிவித்தார்.

இதனால் அதிற்சிக்குள்ளான ராஜு அழத்துவங்கினார். 70 நாட்களில் இதுவரை ராஜு ஒருமுறை கூட கண்களில் தண்ணீர் சிந்தியதில்லை. இதை பார்த்த இமான் அண்ணாச்சி,  "வெளியே வந்து பார்க்க போறோம் வாடா.. என்னடா நீ!" என்று சொல்லி அவரைத்தேற்றி, அனைவரையும் சிறிது தண்ணீர் குடிக்கச் சொல்லி விட்டு வெளியேறினார். 

பின்னர் பிக் பாஸ் குரலை கேட்ட இமான் மீண்டும் வீட்டிற்குள் வந்து பிக் பாஸுடன் விடைபெறுவதாகவும், நன்றியும் தெரிவித்து விட்டு கிளம்பினார். அப்போது அண்ணாச்சியை தூக்கிய ஹவுஸ்சமேட்ஸ் பொதுவாக எம்மனசு தங்கம்" பாடலை பாடி நெகிழ்ச்சி அடைந்தனர். 

click me!