
கொரோனா என்கிற கொடிய தொற்றுநோயால் உலகமே திக்குமுக்காடி போனது. இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா இன்னும் முழுமையாக ஓய்ந்தபாடில்லை. முதல் அலை, இரண்டாவது அலை என மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இந்த கொடிய நோய், தற்போது ஓமைக்ரான் என உருமாறி உள்ளது. விரைவில் 3-வது அலை வரும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கொரோனாவின் கொடூர தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே பேராயுதமாக உள்ளது. இதனால் அனைவரும் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. நம் இந்தியாவிலும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக விழிப்புணர்வு பாடல் ஒன்றை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி உள்ளார். கார்த்திக் இசையமைத்துள்ள இப்பாடலின் வரிகளை மதன் கார்க்கி எழுதி உள்ளார். ‘தடுப்பூசி போடுவோம் உலகத்தை மாற்றுவோம்’ என்ற கருத்தை மையமாக கொண்டு இந்த விழிப்புணர்வு பாடல் உருவாகி உள்ளது.
இப்பாடலில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜீவா, சாந்தனு, காளிதாஸ் ஜெயராம், கலையரசன் ஆகியோரும், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன், கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.