Cheran : ஞாபகம் வருதே.... 17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ‘ஆட்டோகிராப்’ கூட்டணி

Ganesh A   | Asianet News
Published : Dec 12, 2021, 10:06 PM IST
Cheran : ஞாபகம் வருதே.... 17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ‘ஆட்டோகிராப்’ கூட்டணி

சுருக்கம்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனரும், பிக்பாஸ் பிரபலமுமான சேரனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய நாட்டமை, சேரன் பாண்டியன் போன்ற கிராமத்து மனம் கமழும் படங்களில் ஒரு துணை இயக்குனராக வேலை செய்து, பல்வேறு கஷ்டங்களை கடந்து தன்னை ஒரு முன்னணி இயக்குனராகவும், தேசிய விருது இயக்குனராகவும் மெருகேற்றி கொண்டவர் இயக்குனர் சேரன்.

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான 'பாரதி கண்ணம்மா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதை தொடர்ந்து பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை என தொடர்ந்து வெற்றி படங்களாகவும், குடும்பமாக ரசித்து பார்க்க கூடிய படங்களையும் கொடுத்தார்.

சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் தன்னை நடிகராக அறிமுகப்படுத்திக்கொண்டு சேரன், இந்த படத்தை அடுத்து நடித்த ஆட்டோகிராப் படத்தில் இவருடைய நடிப்பு முன்னணி நடிகர்களையே ஆச்சரியப்படுத்தியது. அந்த அளவிற்கு எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.

இந்த படத்திற்கு பின் சேரன் இயக்கத்தில் வெளியான படங்களும், நடித்த படங்களும் சொல்லிக்கொள்ளும் படியாக வெற்றி பெறவில்லை. இதனை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட, கடைசியாக தன்னுடைய வெற்றி திரைப்படம் ஆட்டோகிராப் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் சேரனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதில் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டனின் வாழ்த்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடைசியாக சேரனுடன் ஆட்டோகிராப் படத்தில் பணியாற்றிய விஜய் மில்டன், அதன் பின் அவருடன் பணியாற்றவில்லை.

இந்நிலையில், தற்போது 17 ஆண்டுகளுக்கு பின் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர். சேரன் விரைவில் ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், அப்படத்துக்கு தான் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விஜய் மில்டன். ஆட்டோகிராப் போன்று இந்த படமும் சேரனுக்கு திருப்புமுனை கொடுக்கட்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இவ்வளவு நடந்தும் இன்னும் டிராமாவா: நான் மருமகள் தானே மன்னிக்க கூடாதா: கதறிய தங்கமயில்!
அடுத்த 1000 கோடி வசூலுக்கு ரெடியான ஷாருக்கான்... பட்டாசாய் வந்த ‘பதான் 2’ அப்டேட்