போலீசில் ஜீப்பில் மோதிய பிக்பாஸ் ஜூலியின் கார்! காவலர்களையே தாக்கிய காதலன் இப்ரான் மீது வழக்கு பதிவு!

Published : Mar 12, 2019, 06:01 PM IST
போலீசில் ஜீப்பில் மோதிய பிக்பாஸ் ஜூலியின் கார்!  காவலர்களையே தாக்கிய காதலன் இப்ரான் மீது வழக்கு பதிவு!

சுருக்கம்

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் மூலம் அனைவராலும் அறியப்பட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, தொகுப்பாளர், நடிகை என சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு ரவுண்டு வர நினைத்தவர் ஜூலி. ஆனால் இவர் நடித்த படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளது.  

இந்நிலையில் தற்போது காதலன் இப்ரானுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

தற்போது, ஜூலியின் காதலன் போலீசாரை தாக்கியதாக அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வேப்பேரி காவலர் பூபதி, அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது... "நடிகை ஜூலியின் கார் போலீஸ் ஜீப் மீது மோதியது. இதனை தட்டி கேட்க போன காவலர்களை, ஜூலியுடன் காரில் இருந்த காதலன் இப்ரான்,  தாக்கியதாகவும், அவருக்கு ஆதரவாக 10 பேர் கொண்ட கும்பல்  போலீசை தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

இந்த புகாரில் பேரில் தற்போது ஜூலியின் காதலர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!