
பொள்ளாச்சியில் 100 க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த கயவர்களுக்கு எதிராக பலர் குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது சின்னத்திரை நடிகை நிலானியும், கதறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, போலீஸ் உடையில், காவல் துறையினர் பற்றி அவதுாறாக பேசி பிரபலமானவர் 'டிவி' நடிகை நிலானி. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இவரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து, இவர் திருவண்ணாமலையை சேர்ந்த உதவி இயக்குநரான காந்தி லலித் குமாரும் காதலித்து பின் திருமணம் செய்ய மறுக்கவே, மனமுடைந்த லலித்குமார், கடந்த வருடம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பின் நிலானியும் தற்கொலைக்கு முயன்றார் இந்த சம்பவம் சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது இவர் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ இதோ:
"
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.