15 வருடங்களுக்கு பின் மீண்டும் பிரபல முன்னணி நடிகருடன் இணையும் சூர்யா!

Published : Mar 12, 2019, 04:01 PM IST
15 வருடங்களுக்கு பின் மீண்டும் பிரபல முன்னணி நடிகருடன் இணையும் சூர்யா!

சுருக்கம்

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் நடிகர் சூர்யாவும், மாதவனும் முதல்முறையாக இணைந்து நடித்தனர். இந்த படம் இவர்கள் இருவருக்குமே வெற்றி படமாக அமைந்தது. அதன்பின் கமல்ஹாசன், மாதவன் நடித்த 'மன்மதன் அன்பு' படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.  

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மாதவன் நடிக்கும் படம் ஒன்றில் சூர்யா ஒரு சிறு வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

மாதவன் நடித்து இயக்கி வரும் திரைப்படம் 'ராக்கெட்டரி'. விஞ்ஞானி நம்பி நாராயணன்  வாழ்க்கை வரலாறு திரைப்படமான இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றதில் தான்  நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. அதேபோல் இந்த படத்தின் இந்தி பதிப்பில் இந்த கேரக்டரில் ஷாருக்கான் நடிக்கவுள்ளார்.

மாதவன், சிம்ரன், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். சிர்ஷா ராய் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்ய படத்தொகுப்பில் இந்த படம் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தி கோட் படம் பிடிக்கும்-பாகிஸ்தான் ரசிகை உருக்கம்: உலகளவில் டிரெண்டாகும் விஜய்யின் ஜன நாயகன்!
கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!