இனி 24 மணிநேரமும் பார்க்கலாம்..நாளை முதல் களைகட்டும் பிக்பாஸ் அல்டிமேட்..எந்த டைமுக்கு தெரியுமா?..

Kanmani P   | Asianet News
Published : Jan 29, 2022, 02:57 PM IST
இனி 24 மணிநேரமும் பார்க்கலாம்..நாளை முதல் களைகட்டும் பிக்பாஸ் அல்டிமேட்..எந்த டைமுக்கு தெரியுமா?..

சுருக்கம்

ஹாட்ஸ்டார்  ஓடிடியில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் அல்டிமேட் நாளை (ஜனவரி-30) மாலை 6:30 மணியளவில் கோலாகலமாக தொடங்க இருக்கிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர்களாகினர்.

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்நிகழ்ச்சி தற்போது புதிய பரிணாமத்தில் மக்களை மகிழ்விக்க வருகிறது. அதன்படி ஓடிடி தளத்துக்காக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட உள்ளது. பிரத்யேகமாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக தயாராகும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ளது. 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ள இந்நிகழ்ச்சியின் புரோமோ நேற்று வெளியானது. இதில் முந்தைய சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களை களமிறக்க உள்ளனர். மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளார்களாம்.

அதன்படி முதல் சீசனில் இருந்து சுஜா வருணி, பரணி, ஜூலி, சினேகன் ஆகியோரும், இரண்டாவது சீசனில் இருந்து ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக், தாடி பாலாஜி ஆகியோரும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதா, ஷெரின் ஆகியோரும், நான்காவது சீசனில் அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும், 5-வது சீசனில் இருந்து சுருதி, நதியா சங் மற்றும் இசைவாணி கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஏற்கனவே மல்லுக்கட்டியவர்கள் தான். இதன்மூலம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி வருகிற ஜனவரி 30-ந் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக குக் வித் கோமாளி புகழ் மற்றும் தீனா இடம் பெற்றுள்ள அந்த ப்ரோமோவில் முதல் போட்டியாளருக்கான க்ளூ இடம் பெற்றுள்ளது. யானை, சோளப்பொறி குறியீடுகாட்டுப்பயலே பாடலைக் குறிக்கிறது. இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் சினேகன். அதோடு ப்ரோமோவிலேயே பாம்பு மற்றும் துப்பாக்கியையும் காட்டுகிறார்கள். அதனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன் கலந்துக் கொள்ளவிருப்பது உறுதியாகியிருக்கிறது. 

சினேகனை தொடர்ந்து கேமரா முன்னாள் ஜூலி, சமையலறையில் சுரேஷ் சக்ரவர்த்தி, நாட்டியமாடிய படி அபிராமி, 4 போட்டியாளர்களை அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட்.. வனிதாவுக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலாக முன்பு அவர் வெளியேறிய போது கமல் அறிவிப்பை மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் போட்டு பார்க்கிறார்..உடனே பிக் பாஸ் குரல் கேட்கிறது..அதில் திரும்ப திரும்ப பார்த்தது போதும் பிக்பாஸ் அல்டிமேட்டுக்கு வாங்க என கூறுகிறார்.. 

மேலும் இதில் அனிதா சம்பத், பாலாஜி போன்றொரும் கலந்துகொள்வதாக கூறப்படும் நிலையில் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி நாளை (ஜனவரி-30) மாலை 6:30 மணியளவில் கோலாகலமாக தொடங்க இருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Asha Bhosle Net Worth: ரூ.250 கோடி சொத்து, வெளிநாட்டு பிசினஸ்..! ஆஷா போஸ்லேவின் வாரிசு யார்?
விஜய் தேவரகொண்டா பேசிய அந்த வார்த்தை! கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்ட ராஷ்மிகா ! என்ன நடந்தது ?