"காதலருக்கு பிடிக்காததை பகிர்ந்து" வித்யாசமாக பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்..

Kanmani P   | Asianet News
Published : Jan 29, 2022, 11:41 AM IST
"காதலருக்கு பிடிக்காததை பகிர்ந்து" வித்யாசமாக பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்..

சுருக்கம்

நீங்கள் ஒரு மோசமான டீன் ஏஜ் பையனிலிருந்து இந்த அற்புதமான மனிதராக பரிணமித்ததைப் பார்க்க நான் அதிர்ஷ்டசாலி தனது காதலர் ராஜவேல் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்...

சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வந்த பிரியா பவானி ஷங்கர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேயாத மான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி ஷங்கர் கைவசம் தற்போது படவாய்ப்புகள் எச்சக்கச்சம். 

2021ம் ஆண்டை பொறுத்தவரை  'குருதி ஆட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'பொம்மை', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'இந்தியன் 2',  ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். 

பிரியா பவானி ஷங்கர் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே ராஜ்வேல் என்பவரை காதலித்து வந்துள்ளார்.. முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவருக்கு கல்லூரி காதல் தொடர்வது ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் தான்..ஆனால் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இருவரும் காதல் ஜோடியாக இனி பிரியாமல் இருந்து வருகின்றனர். கடந்த வருட பிறந்த நாளில் 2011-ம் வருடம் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து "2011 மற்றும் 2021. ராஜ்வேல் உன் பிறந்தநாளுக்கு நான் என்ன எடுத்து வைத்திருக்கிறேன் பார். இந்த 10 வருடங்களில் வாழ்க்கை மாறிவிட்டது. ஆனால் நமக்குள் இருக்கும் பிணைப்பு மட்டுமே இன்னும் மாறாமல் இருக்கிறது. எது நடந்தாலும் அது மாறாது. உனக்கு இந்த உலகத்தில் சிறந்த விஷயங்கள் கிடைக்க வேண்டும். சிறந்த டான்சர், guitarist மற்றும் ராக்ஸ்டார் ஆக இரு. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா.." என ப்ரியா பவானி ஷங்கர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஜவேல் இன்று பிறந்தநாள் காண்கிறார் அவருக்கு வாழ்த்து கூறியுள்ள பிரியா பவானி சங்கர்..."ஹப்பி பர்த்டேய் ராஜ் மா , நீங்கள் ஒரு மோசமான டீன் ஏஜ் பையனிலிருந்து இந்த அற்புதமான மனிதராக பரிணமித்ததைப் பார்க்க நான் அதிர்ஷ்டசாலி   rajvel.rs PS: இந்த படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியும், அதனால்தான் நான் இடுகையிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள் பட்டியல்: லேட்டஸ்ட் கோலிவுட் அப்டேட்!
2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?