
வெள்ளாவி வச்சு வெளுத்தது போன்ற அழகில், தமிழ் ரசிகர்களை சுமார் 15 வருடங்களாக கவர்ந்திழுத்து வருபவர் நடிகை தமன்னா. தமிழ் - தெலுங்கு ஆகிய இரு படங்களிலுமே அதிகம் ஆர்வம் காட்டி வந்த இவர், இரு மொழியை சேர்ந்த முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். குறிப்பாக பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் இவர், நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த பின்னர் உலக அளவில் பிரபலமானார்.
எனவே சமீப காலமாக தான் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதைகளையே அதிகம் தேர்வு செய்கிறார். தற்போது இவரது கை வசம் ஒரு தமிழ் படம் கூட இல்லை என்றாலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்கள் அம்மணிக்கு வரிசை கட்டி நிற்கிறது.
அந்தவகையில் தற்போது தமன்னா சிறப்பு பாடல் ஒன்றுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.. வருண் தேஜை ஹீரோவாக வைத்து கிரண் கொரபாட்டி 'கனி' படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். படத்தை அல்லு பாபி - சித்து முத்தா தயாரித்துள்ளனர். வருண் தேஜ் ஜோடியாக சாய் மஞ்ச்ரேக்கர் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார்.
இந்த படத்தில் நட்சத்திர நாயகி தமன்னா சிறப்பு பாடலில் நடிக்கிறார் என்பது தெரிந்ததே. ராமஜோய்யா சாஸ்திரி இசையமைத்த இந்தப் பாடலை ஹரிகா நாராயண் பாடியுள்ளார். சமீபத்தில் இந்த பாடலின் படப்பிடிப்பு முடிவடைந்து வால்பேப்பர்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் Kodthe Lyrical வீடியோ வெளியாகி மாஸ் ட்ரெண்டாகி வருகிறார்.
இந்நிலையில் தமன்னா kodthe பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பதிவிட்டு kodthe dance challenge -க்கு ரெடியா என் அரசிகர்களை கேட்டுள்ளார்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.