சித்தப்புவின் பட்டப்பெயரை சுட்டு மகனுக்கு வைத்த எஸ்.ஏ.சி...எதிர்த்து கேட்டவரை கேவலமாக பழி தீர்த்த விஜய் அப்பா!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 27, 2020, 08:33 PM IST
சித்தப்புவின் பட்டப்பெயரை சுட்டு மகனுக்கு வைத்த எஸ்.ஏ.சி...எதிர்த்து கேட்டவரை கேவலமாக பழி தீர்த்த விஜய் அப்பா!

சுருக்கம்

பட வாய்ப்புகள் இருந்த வரை நல்லதே நடக்கும் படத்தில் இருந்து சரவணன் நடித்த அடுத்தடுத்த படங்களுக்கும்  “இளைய தளபதி” டைட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் விஜயகாந்தின் சாயலில் இருப்பதால் மிகவும் ரசிகர்களால் கவரப்பட்டவர் நடிகர் சரவணன். தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்கு பட்டப்பெயர் மிகவும் முக்கியம் சூப்பர் ஸ்டார், உலக நாயகன். தல, தளபதி, அல்டிமேட் ஸ்டார் என அவர்களுடைய பெயர்களை விட பட்டப்பெயர்கள் தான் ரசிகர்களை அதிகம் கவரக்கூடியது. பல வெற்றிப்படங்களை கொடுத்த சரவணன் நடித்த, “நல்லதே நடக்கும்”படத்தின் டைட்டில் கார்டில் அவருக்கு “இளைய தளபதி” என்று பட்டம் கொடுக்கப்பட்டிருக்கும். இதையடுத்து சரவணனிடம் பிரபல வார இதழ் ஒன்று பேட்டி கண்டுள்ளது. 

சேலத்தில் இருந்து சினிமாவிற்கு சென்று புகழ் பெற்றவர் சரவணன், அதனால் சேலத்தில் அவருக்கு பாராட்டு விழா ஒன்று நடந்துள்ளது. அந்த விழாவிற்கு திமுகவைச் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம் தலைமை தாங்கியுள்ளார். சேலத்தில் தளபதி மாதிரி சுத்திக்கிட்டு இருந்த தம்பி சரவணன் சினிமாவில் சாதிச்சிருக்கார். அவருக்கு ஏதாவது பட்டப்பெயர் தர வேண்டாமா?....‘தளபதி’ன்னு பட்டப்பெயர் கொடுக்கலாம். ஆனால் சென்னையில் ஏற்கனவே ஒரு ‘தளபதி’ இருக்கார். அதனால் “இளைய தளபதி” என பட்டப்பெயர் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். 

பட வாய்ப்புகள் இருந்த வரை நல்லதே நடக்கும் படத்தில் இருந்து சரவணன் நடித்த அடுத்தடுத்த படங்களுக்கும்  “இளைய தளபதி” டைட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இடையில் சரவணனுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அப்படிப்பட்ட நிலையில் விஜய் ஹீரோவாக நடித்த ஒரு படத்தில் இளைய தளபதி என்று டைட்டில் கார்டு போடப்பட்டது. அதைப் பார்த்த சரவணன் அவருடைய அண்னனுடன் சென்று எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்துள்ளார். எப்படி சார் என் டைட்டிலை உங்க மகனுக்கு பயன்படுத்துவீங்க என்று கேட்டுள்ளார். அதற்கு எஸ்.ஏ.சி, உங்களுக்கு படம் வரும் போது அந்த டைட்டிலை நீங்களே பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம். 

அப்படி எஸ்.ஏ.சி. சொன்னதில் இருந்து தனக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை என்று சரவணன் தெரிவித்துள்ளார். ஒருவேளை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் தனது டைட்டிலை பயன்படுத்துவதற்காக படவாய்ப்புகள் கிடைக்காமல் செய்துவிட்டாரோ என்ற கடுப்பும் சரவணனுக்கு உள்ளது போல் தெரிகிறது.“பருத்திவீரன்” படம் மூலம் கம்பேக் கொடுத்த சரவணனுக்கு, அந்த படத்தில் கார்த்தி பாசமாக அழைத்த  “சித்தப்பு” என்பதே நிரந்தர பட்டப்பெயராக அமைந்துவிட்டது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!
மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ