“டிக்கிலோனா” ஆட்டத்தை ஆரம்பித்த சந்தானம்... டாப் ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...!

Published : May 27, 2020, 07:49 PM IST
“டிக்கிலோனா” ஆட்டத்தை ஆரம்பித்த சந்தானம்... டாப் ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...!

சுருக்கம்

சந்தானம் 3 வித கெட்டப்புகளில் நடித்துள்ள டிக்கிலோனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் கடைசியாக வெளி வந்த டகால்டி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அந்த படத்தை தொடர்ந்து சர்வர் சுந்தரம் படத்தில் நடித்தார். தற்போது கொரோனா பிரச்சனையால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் சர்வர் சுந்தரம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து வந்த சந்தானம் தற்போது நடித்துள்ள திரைப்படம் டிக்கிலோனா. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே களம் இறங்கியுள்ளது. 

இது எல்லாம் போதாது என்று அனகா, ஷிரின் என்ற இரண்டு ஹீரோயின்கள் வேறு சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளனர். எழுத்தாளரும் புதுமுக இயக்குநருமான கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை  பலூன் படத்தை தயாரித்த சினிஷ் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். புரோமோஷன் கிங்கான கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

சந்தானம் 3 வித கெட்டப்புகளில் நடித்துள்ள டிக்கிலோனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாகவே டிக்கிலோனா படத்தில் நடித்துள்ள சந்தானத்தின் ஒவ்வொரு லுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சந்தானம் 3 வித்தியாசமான கெட்டப்புகளில் உள்ள டிக்கிலோனா பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. போஸ்டரை பார்க்கும் போது ஏதோ டைம் டிராவல் படம் போல் தெரிகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Top 10 Big Budget Movies: கோடி கோடியாய் கொட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் டாப் 10 மெகா பட்ஜெட் மூவீஸ்!
Keerthy Suresh: ஒரு பாட்டுக்கு 1 கோடி சம்பளமா? காட்டுத்தீ போல் பரவிய தகவல்... 'தி பாரடைஸ்' படக்குழு விளக்கம்