
'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்த நடிகையை, கட்டாயப்படுத்தி காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக அவருடன் தனிமையில் இருந்து விட்டு தற்போது, திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக, பிரபல ஒளிப்பதிவாளர் மீது நடிகை சாய் சுதா பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, தளபதி விஜய் நடித்த போக்கிரி, உள்ளிட்ட பல தெலுங்கு முன்னணி பிரபலங்கள் நடித்த பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
இவர் மீது அர்ஜுன் ரெட்டி புகழ் சாய் சுதா, எஸ்.ஆர்.நகர் போலீசில் கொடுத்த புகாரில் ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, தன்னை கட்டாயப்படுத்தி காதலிக்க செய்தார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பயன்படுத்தி கொண்டு, தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: கல்யாணமே வேண்டாம்... இனி கட்ட பிரம்மச்சாரியாவே வாழ்ந்துக்குறேன்! காமெடி நடிகரின் திடீர் முடிவு!
இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது எஸ்.ஆர்.நகர் போலீசார் இவரை கைது செய்துள்ளனர். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடுவின் சகோதரர், மற்றும் பிரபல இயக்குனர் பூரி ஜெகநாதனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சாய் சுதா, அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் மீது நடிகை கொடுத்துள்ள இந்த புகார், தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.