
விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் முதல் பாகம் 2017 ஜூன் 25 அன்று தொடங்கி நூறு நாட்கள் ஒளிபரப்பாகியது. இரண்டாம் பாகம், 2018 ஜூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளையும் கமல் தொகுத்து வழங்கினார். இந்த இரு சீசன்களும் மகத்தான வெற்றியைப் பெற்றது.
பிக்பாஸ் 1 மற்றும் 2 ஆகிய இரு சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு சினிமாவில் நாயகனாக நடிக்க வாங்கிய சம்பளத்தைக் காட்டிலும் அதிகம் வாங்கியதாக கூறப்பட்டது. இவ்வாண்டு இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் தயாராகவுள்ளது.
இந்நிகழ்ச்சி இம்முறை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், மீண்டும் விஜய் தொலைக்காட்சியே பிக் பாஸ் மூன்றாம் பாகத்தை ஒளிபரப்பவிருக்கிறதாம்.
அதேபோல் கமல்தான் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறாராம். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்தில், ஒரு நாளுக்கு ஒரு கோடி வீதம் நூறு கோடி சம்பளம் வேண்டுமென்று கமல் கேட்டுள்ளார்.
இதனால் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் அதிர்ச்சியடைந்தாலும். விளம்பர வருவாய் கோடிக் கணக்கில் வருவதால் தொலைக்காட்சி நிறுவனம் ஒப்புக்கொள்ளும் முடிவில் உள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.