
இதுகுறித்து, பிரபல இயக்குனர் பாரதி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
திரையுலகில் அனைத்து தயாரிப்பாளர்களையும் அரவணைத்துச் செல்லும் நல்லுள்ளம் கொண்டவர் உயர்திரு. எல். எம்.எம். முரளிதரன் அவர்கள்.
நினைத்து மகிழக்கூடிய 'அன்பே சிவம்', 'உன்னை நினைத்து' , 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்', 'கோகுலத்தில் சீதை' போன்ற பல சிறந்த திரைப்படங்களைத் தயாரித்தவர். மிகப் பெரிய நடிகர்களின் படங்களைத் தயாரித்ததின் மூலம் நிறைய குடும்பங்களுக்கு ஆதரவளித்தவர்.
பிக்பாஸ் ஜிபி முத்துவை சரமாரியாக பிளேடில் வெட்டிய சகோதரர்! 175 தையல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
யார் மனதையும் காயப்படுத்தாத மெல்லிய மனதுக்குச் சொந்தக்காரர். அவரின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு திரையுலகம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
ஒரு நல்ல தயாரிப்பாளரை இழந்துள்ளோம். அவரது இழப்பு குடும்பத்தினருக்கும், திரையுலகிற்கும் பேரிழப்பு.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் Tamil Film Active Producers சங்கத்தின் சார்பாக ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறோம். என தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, பல வெற்றிப்படங்களைத் தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் கே. முரளிதரன் மறைந்துவிட்டார். அன்பே சிவம் நாட்களை நினைத்துக்கொள்கிறேன். அஞ்சலி என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.