தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த, பிரபல தயாரிப்பாளர்... லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனர்களில் ஒருவரான கே.முரளிதரன் உடல்நல குறைவால் மரணமடைந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் கடந்த 1994 ஆம் ஆண்டு சரத்குமார் மற்றும் சிவரஞ்சனி நடிப்பில் வெளியான 'அரண்மனை காவலன்' படத்தின் மூலம் தன்னுடைய முதல் தயாரிப்பை துவங்கிய நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ். இதை தொடர்ந்து, கமலஹாசன் விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா ஆகியோரை வைத்து அன்பே சிவம், வீரம் வெளஞ்ச மண்ணு, மிஸ்டர்.மெட்ராஸ் கோகுலத்தில் சீதை, அரண்மனை காவலன், வேலுச்சாமி, ப்ரியமுடன், பகவதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து, புதுப்பேட்டை ஆகிய வெற்றி படங்களை பங்குதாரர்களின் ஒருவராக இருந்து தயாரித்தவர் கே.முரளிதரன்.
பல கெட்டப்பில் காமெடியில் தெறிக்கவிடும் வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'..! ட்ரைலர் வெளியானது..!
கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இவர், இன்று பிற்பகல் 1:30 மணியளவில் தன்னுடைய சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோயிலில் காலமானார். இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் பிரபலங்கள் மற்றும் தமிழ் திரையுலக ரசிகர்கள் பலர் இவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
சாகும் வரை நோயோடு போராட வேண்டும்! சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பூனம் கவுர்..!
லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், முரளிதரன், சுவாமிநாதன், மற்றும் வேணுகோபால் ஆகிய மூவரால் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வந்த தயாரிப்பு நிறுவனம் ஆகும். பட தயாரிப்பை தாண்டி சில படங்களை விநியோகமும் செய்துள்ளனர். இவர்கள் தயாரிப்பில் கடைசியாக கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை படம் தான் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இதை தொடர்ந்து வெளியான சிலம்பாட்டம், ஆட்ட நாயகன், மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தது. எனவே 2015 ஆம் ஆண்டு பிறகு இந்த நிறுவனம் சார்பில் எந்த படங்களும் தயாரிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.