'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை அதிர்ச்சி மரணம்! சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை பிரபலங்கள்!

By manimegalai a  |  First Published May 15, 2023, 3:09 PM IST

 சில திரைப்படங்களிலும்,  சீரியல்களிலும் நடித்துள்ள பழம்பெரும் நடிகை, விஜயலட்சுமி (70) உடல்நல குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.
 


எப்படி வெள்ளித்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறதோ... அதே போன்ற வரவேற்பு சின்னத்திரை பிரபலங்களுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். தினமும் தொலைக்காட்சியில் சின்னத்திரை பிரபலங்களை ரசிகர்கள் பார்ப்பதால், அவர்கள் பற்றிய எந்த தகவல் வெளியானாலும் அது வைரலாகி விடுகிறது.

அந்த வகையில் தற்போது சின்னத்திரை ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது பிரபலம் ஒருவரின் மரணம். 10க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவரும், சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா, போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி. 70 வயதாகும் இவர் இன்று காலை தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

விக்ரம் உடன் ஹாட்ரிக் கூட்டணிக்கு தயாரான ஐஸ்வர்யா ராய்... இந்த முறையாவது ஜோடி சேர்வார்களா?

இவருடைய மரணம் குறித்து நம் ஏசியா நெட் தரப்பில் இருந்து விசாரித்தபோது... "கடந்த சில மாதங்களாகவே விஜயலட்சுமி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மேலும் சில தினங்களுக்கு முன்பு, பாத்ரூமில் இருந்து வழுக்கி விழுந்து... தலையில் பலமாக அடிபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்த இவர், நேற்று தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்ததாகவும், தொடர்ந்து சோர்வாகவே இருந்த அவர் இன்று அதிகாலை தூக்கத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்".

வாவ் அழகோ... அழகோ..! காதலருடன் இருக்கும் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பரினீதி சோப்ரா!

பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும், நிஜத்தில் எந்நேரமும் சிரித்த முகத்துடன், அனைவரிடமும் அன்பாக  பழகும் குணம் கொண்டவர். இவரின் மரணம் ஒட்டு மொத்த சின்னத்திரை பிரபலங்களையும் உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரசிகர்களும் தொடர்ந்து இவரின்  மறைவுக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!