
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இஷா கோபிகர். இவர் தமிழிலும் விஜய்க்கு ஜோடியாக நெஞ்சினிலே, விஜயகாந்தின் நரசிம்மா, அரவிந்த்சாமி உடன் என் சுவாசக்காற்றே போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி வரும் அயலான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை இஷா கோபிகர் பிரபல நடிகர் மீது மீடூ புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “இந்தியில் ஒரு படத்தில் கமிட் ஆனபோது அந்த படத்தின் ஹீரோ என்னை தனியாக வரும்படி அழைத்தார். பின்னர் தயாரிப்பாளர் என்னிடம் வந்த, ஹீரோவுக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. அவரை தனியாக சென்று சந்திக்குமாறு கூறினார்.
அப்போது தான் அந்த நடிகரின் நோக்கம் எனக்கு புரிந்தது. நான் என் அழகாலும், திறமையாலும் தான் சினிமாவுக்கு வந்தேன். அவற்றையெல்லாம் ஒரு படத்திற்காக அடகு வைத்துவிட முடியாது, அந்த அவசியமும் எனக்கு இல்லை என்று முகத்தில் அறைந்த மாதிரி சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.
இதனால் கோபமடைந்த அந்த தயாரிப்பாளர் என்னை அவரது படத்தில் இருந்து நீக்கியது மட்டுமின்றி எனக்கு பிற பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார். எனது கெரியரை சீர்குலைத்துவிட்டார்” என்று நடிகை இஷா கோபிகர் தெரிவித்தார். அவரின் இந்த குற்றச்சாட்டு திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... Vikram Trailer : கமலின் ‘விக்ரம்’ டிரைலரை பார்த்து ஹாலிவுட்டே மிரள போகுது - எங்க ரிலீஸ் பண்ணபோறாங்க தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.