Pisasu 2 Teaser From April 29th : பிசாசாக மாறிய ஆண்ட்ரியா..நல்ல செய்தி சொன்ன மிஷ்கின் .

By Kanmani P  |  First Published Apr 25, 2022, 8:20 PM IST

Pisasu 2 Teaser From April 29th : பிசாசு 2 டீசர் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் டீசர் வெளியாகிறது.


கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா தயாரித்து, மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானது. இப்படத்தில் நாகா, ராஜ்குமார் பிச்சுமணி, அஷ்வத் ஆகியோருடன் ராதாரவி , கல்யாணி நடராஜன், பிரயாகா மார்ட்டின் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த  படம்  தெலுங்கு பதிப்பு  'பிசாச்சி'  27 பிப்ரவரி 2015 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் கன்னடத்தில் 'ராக்ஷசி' என்றும் இந்தியில் 'நானு கி ஜானு' என்றும் ரீமேக் செய்யப்பட்டது.. இந்த படம் சித்தார்த் சௌந்தரராஜன் என்னும் பெயரில் வரும் நாயகன் எதிர்பாராத விதமாக விபத்தை ஏற்படுத்தி விடுகிறார். அந்த விபத்தில் நாயகி சிக்கி உயிரிழக்கிறார். ஆனால் உண்மையில் நாயகனுக்கு தன்னால் தான் நாயகி மரணித்தார் என தெரியாது. பின்னர் பேயாக நாயகனை சுற்றி வரும் நாயகியை சாந்தியடைய வைக்க கொலைகாரனை தேடும் முயற்சியில் நாயகன் இறங்க அவரை தடுத்து நிறுத்த பல யுக்திகளை செய்கிறார் பேயாக இருக்கும் நாயகி. இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.

Tap to resize

Latest Videos

பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'பிசாசு 2' படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கி வருகிறார். இதை  ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும்கெளரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் "உறவின் பாட்டு" காந்தி ஜெயந்தி அன்று அக்டோபர் 2 அன்று வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இப்படத்தின் டீசர் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் டீசர் வெளியாகிறது.

click me!